தேவையான பொருட்கள்
இறால் -1 கிலோ
சின்ன வெங்காயம் - 20 எண்ணம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் -2
குடை மிளகாய் துண்டுகள் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மல்லி தழை - சிறிது
செய்முறை
இறாலைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் எண்ணைய் விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து பொரிந்தவுடன், பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி மசிந்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.பின்பு அதனுடன் மிளகாய்த் தூள், மல்லித்தூள்,மிளகுத்தூள்,பட்டைத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கிய பின் வெட்டிய குடைமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலா இறாலின் மீது படும் வரை நன்கு பிரட்டவும். பின்பு கடாயை மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். கடாயைத் திறந்து கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.
No comments:
Post a Comment