Thursday, November 2, 2023

மரவள்ளிக்கிழங்கு மாவு புட்டு/கிழங்கு புட்டு/Steamed Tapioca Cake/Tapioca puttu

மரவள்ளிக்கிழங்கு அதிகமாக கிடைக்கும் காலங்களில் அவற்றை வாங்கி நன்றாகக் கழுவி, தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மொட்டை மாடியில் வெயிலில் காய வைக்கவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் வரை நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொண்டால் சுமார் நான்கு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். எப்பொழுது தேவையோ அப்பொழுது எடுத்து வேக வைத்து சாப்பிடலாம். இவ்வாறு காய வைத்த கிழங்கை வெட்டுக்கிழங்கு என்று அழைப்பார்கள். இந்தக் காய வைத்த வெட்டுக்கிழங்கை மாவு மில்லில் கொடுத்து பொடித்தால் மரவள்ளிக்கிழங்கு மாவு தயார். மரவள்ளிக்கிழங்கு மாவில் கருப்பட்டி சேர்த்து புட்டு செய்து காலை சிற்றுண்டியாகவோ அல்லது மாலை சிற்றுண்டியாகவோ குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவாக அமையும்.



தேவையான பொருள்கள்

மரவள்ளிக்கிழங்கு மாவு - 1 & 1/2 கப்

கருப்பட்டி பொடித்தது - 1/4 கப்

தேங்காய் - 1/4 கப்

உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - 1/2 கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பொடித்த கருப்புக்கட்டியைச் சேர்த்து மேற்கூறிய அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கிளறவும். கருப்புக்கட்டி கரையும் வரை அடுப்பில் வைத்திருந்து பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.

ஆறிய பின் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டிக்கொள்ளவும். கருப்பட்டியில் மண் அல்லது வேறு ஏதாவது அழுக்குகள் இருந்தால் அவை வடிகட்டியில் வந்து விடும். 

ஒரு பரந்த பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு மாவைக் கொட்டி அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். பின் வடிகட்டி வைத்துள்ள கருப்பட்டித் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். மாவு முழுவதும் நனையும் படி நன்றாக கை வைத்துப் பிசைந்து முடிந்த அளவு பெரிய கட்டிகள் இல்லாமல் உதிரி உதிரியாக பிசையவும். அரிசி மாவைப் போன்றில்லாமல் மிகவும் மென்மையாக இருப்பதால் சிறு சிறு கட்டிகள் ஏற்படும். 

பின் புட்டுக்குடத்தில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதிப்பதற்குள் புட்டுக்குழாயில் முதலில் தேங்காய் சேர்த்து பின் தயார் செய்து வைத்துள்ள மாவைச் சேர்க்கவும். இவ்வாறு தேங்காய் பின் மாவு என்று மாற்றி மாற்றி புட்டுக்குழாய் நிறையும் வரை சேர்க்கவும்.

இப்பொழுது புட்டுக்குழாயை, புட்டுக்குடத்தில் வைத்து வேக வைக்கவும். புட்டுக்குழாயின் மேலிருந்து ஆவி வந்த பிறகு சுமார் 5-7 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான மரவள்ளிக்கிழங்கு மாவு புட்டு தயார்.

To make Tapioca flour

Wash required amount of Tapioca well, remove the skin and cut it into small pieces and dry it in the sun on the terrace. In this way, if it is dried well in the sun for a week and stored in airtight containers, it will not spoil for about four months. You can take it and cook it whenever you want. Tapioca flour is ready if you grind this in a flour mill. Tapioca flour mixed with palm sugar and served to children as a morning snack or an evening snack makes for a delicious yet healthy meal.



For the puttu/steamed cake

Ingredients

Cassava flour/Tapioca flour – 1 & 1/2 cup

Palm sugar - 1/4 cup

Coconut - 1/4 cup

Salt - a pinch

Water - 1/2 cup

Recipe

In a vessel add palm sugar and add the above amount of water and stir it on the stove. Keep it in the stove until the palm sugar melts and then remove from the stove and let it cool.

After cooling, filter using a strainer. If there is any dirt in the palm sugar, it will get into the filter.

Pour the tapioca flour in a wide pan and mix it with salt. Then add the filtered palm sugar water little by little and stir. Mix well with your hands so that the dough is completely wet and without any large lumps. As the tapioca flour is very soft, it will form small lumps which is unavoidable.

Fill the steamer pot with water and switch on the stove. Before the water boils, lets prepare the puttu maker ready. For that first add coconut and then add the prepared tapioca flour. Add coconut, flour alternately until the puttu maker is full.

Now put the puttu maker on top of the steamer and steam it. After the steam comes from the top of the puttu maker, steam it for about 5-7 minutes. Now the delicious tapioca flour puttu/cake is ready.