Saturday, May 31, 2008

முகம் பளபளக்க சில டிப்ஸ்:

பெண்கள் தங்கள் முகத்தைப் பளபளப்பாகவும் அழகாகவும் வைத்திருக்க சில வழிமுறைகள் :

* எலுமிச்சம் பழச்சாற்றை வெதுவெதுப்பான பாலேட்டில் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறிய பின் கழுவி வரவும்.

* பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி ஊற வைத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும்.

* வாழைப் பழத்தைப் பிசைந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரவும்.

* தக்காளிப் பழத்தை அரைத்து கொஞ்சம் பால், எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி ஊற வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவி வரவும்.

* பச்சைப் பயறைத் தோலுடன் அரைத்து மாவாக்கி அதை நீரில் குழைத்து முகத்தில் நன்றாகத் தடவி ஊற விட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கழுவி வரவும். முகத்தில் எண்ணெய் வழியாது.

* வெள்ளரிக்காய்ச் சாறு எடுத்து சிறிது பால் கலந்து அதில் பஞ்சை நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாக அழுத்தித் தேய்த்து வரவும்.

* தக்காளியை அரை வேக்காடாக சமைத்து உண்டு வரவும். புத்துணர்ச்சியும் அளிக்கும்.

Thursday, May 1, 2008

PIT - May 2008 புகைப்படப்போட்டிக்கான பதிவு


நமது கேமராவில் சிக்கிய ஜோடி இது. படத்தைக் கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்.