Thursday, July 3, 2008

அத்திப்பழத்தின் சிறப்பு :


இன்றைய இள வயதினரிடையே காணப்படும் மிகப் பரவலான நோய் ரத்தசோகை எனப்படும் ரத்தக்குறைபாடு. இதற்கு காரணம் தவறான உணவு பழக்க வழக்கங்களே. உப்பு, புளிப்பு, காரம் மிகுந்த உணவுகளும் அளவிற்கு அதிகமான மது பழக்கமும் ரத்தசோகையை ஏற்படுத்தும். இந்நோய் ஏற்படாமல் இருக்கவும் , இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அத்திப்பழம் சிறந்த மருந்தாகிறது. உலர்ந்த அத்திப்பழம் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. ரத்தத்தை சுத்தப்படுத்தி அதிகரிக்கச் செய்கிறது.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள். சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

4 comments:

Illatharasi said...

eppo enakku vangi thara poreenga ;)

MJS said...

வாங்கி தந்துடறேன்............

Sathiya said...

//சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.//
அப்போ நான் கண்டிப்பா சாப்பிடனும்! இதுக்கு இன்கிளிபீஷ்ல என்ன பெயர்?

MJS said...

கண்டிப்பா சாப்பிடுங்க சத்யா!!!!!! இதற்கு ஆங்கிலத்தில் "Fig" என்று பெயர். சிங்கப்பூரில் உலர்ந்த அத்திப் பழம்(Fig) கிடைக்கிறது.