Thursday, April 17, 2008

தக்காளி தரும் அழகு:

நாம் அன்றாடம் உணவுக்கு பயன்படுத்தும் காய்களில் தக்காளி பெரும் பங்கு வகிக்கிறது. இது உணவுக்கு சுவை தருவதோடு பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தள தள மேனி தருகிறது இந்த தக்காளி. இதில் குறைந்த அளவு மாவுச் சத்து உள்ளதால் நீரிழிவுப் பிணியாளர்களுக்கு அருமையான மருந்துச் சாறாக தக்காளிச் சாறு பயன்படுகிறது. இந்த தக்காளி முகப்பொலிவு மற்றும் இளமையைக் கூட்ட உதவுகிறது. இரத்த சோகை மற்றும் வாயுத் தொல்லையை விலக்குகிறது.

முகத்தைப் பள பளவென வைத்திருக்க சில வழிகள்:

1. ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையை கலந்து கொள்ளவும். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவவும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாக பிரகாசிக்கும்.

2. ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளவும். இதை முகத்துக்குப் பூசி 5 நிமிடம் கழித்து கழுவவும். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.

3. ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். இமைகளின் மேல் இந்த கலவையைப் பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவவும். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தால் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.

6 comments:

Anonymous said...

நல்ல குறிப்பு !!!

MJS said...
This comment has been removed by the author.
MJS said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

MJS said...
This comment has been removed by the author.
Unknown said...

very useful

MJS said...

Thanks Sivaprakasam!!!!!!!