Showing posts with label beauty tips in tamil. Show all posts
Showing posts with label beauty tips in tamil. Show all posts

Monday, April 30, 2012

அழகுக்குறிப்பு

* நரையைப் போக்க மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து மைய அரைத்து இரவு படுக்கப் போகும் முன் தேய்த்து சிறிது காய்ந்ததும் படுத்துவிடலாம். மறுநாள் காலை எழுந்து குளித்தால் முடி சிறிது நிறம் மாறி இருக்கும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வர நரை போய் விடும்.

* மருதாணி இலையைச் சுத்தம் செய்து மைய அரைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் உலர வைத்தால் மாத்திரை போல் கிடைக்கும். பின் இதனை சலித்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வர முடி வளர்ச்சி பெறும்.

* நெல்லிக்கனிகளைதண்ணீரில் போட்டு ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் அந்த நீரில் எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து பின் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் சிறிது நாட்களிலேயே செம்பட்டை முடி கருப்பாக மாறும்.

* காரட் தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வதுடன் 2 டம்ளர் மோருடன் 2 காரட்டையும் போட்டு மைய அரைத்துக் குடித்து வர உடல் இளைக்க ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடவும

* 50 மிலி இஞ்சிசாற்றை எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தேன் 50 மிலி ஊற்றி ஆற வைத்து எடுத்துக் கொண்டு தினசரி காலை மாலை என 2 வேளை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர பருத்த வயறு குறையும்.

*நெல்லிக்காயை எலுமிச்சம்பழச் சாற்றை விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து உலர வைத்து பின்னர் குளித்து வர தலை முடி உதிர்வது நின்று விடும்.


*மருதாணி இலையை அரைத்து உடல் மீது தேய்த்து வந்தால் உடல் பளபளப்பாகி கருப்பு நிறம் மாறும்.

* எலுமிச்சை சாறு பிழிந்து ஆவியை முகத்தில் 3 நாட்கள் பிடித்து வர முகம் பளபளப்பாகும்.

* கருவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் இருக்கும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு இவற்றை தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர முடி நன்றாக வளரும்.

* மருதாணி இலையை அரைத்து தலைக்கு குளித்து வந்தால் பேன், பொடுகு மறையும். நரையும் குறையும்.

* தேங்காய் எண்ணையில் மஞ்சள் தூளை நன்கு குழைத்து கண்களைச் சுற்றிலும் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வர கண்களைச் சுற்றிலும் காணப்படும் கருவளையம் மாறி விடும்.

* கருமையடைந்த முகம் பொலிவு பெற பாதம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வர பொலிவு பெறும்.

Saturday, May 31, 2008

முகம் பளபளக்க சில டிப்ஸ்:

பெண்கள் தங்கள் முகத்தைப் பளபளப்பாகவும் அழகாகவும் வைத்திருக்க சில வழிமுறைகள் :

* எலுமிச்சம் பழச்சாற்றை வெதுவெதுப்பான பாலேட்டில் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறிய பின் கழுவி வரவும்.

* பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி ஊற வைத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும்.

* வாழைப் பழத்தைப் பிசைந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரவும்.

* தக்காளிப் பழத்தை அரைத்து கொஞ்சம் பால், எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி ஊற வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவி வரவும்.

* பச்சைப் பயறைத் தோலுடன் அரைத்து மாவாக்கி அதை நீரில் குழைத்து முகத்தில் நன்றாகத் தடவி ஊற விட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கழுவி வரவும். முகத்தில் எண்ணெய் வழியாது.

* வெள்ளரிக்காய்ச் சாறு எடுத்து சிறிது பால் கலந்து அதில் பஞ்சை நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாக அழுத்தித் தேய்த்து வரவும்.

* தக்காளியை அரை வேக்காடாக சமைத்து உண்டு வரவும். புத்துணர்ச்சியும் அளிக்கும்.

Thursday, April 17, 2008

தக்காளி தரும் அழகு:

நாம் அன்றாடம் உணவுக்கு பயன்படுத்தும் காய்களில் தக்காளி பெரும் பங்கு வகிக்கிறது. இது உணவுக்கு சுவை தருவதோடு பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தள தள மேனி தருகிறது இந்த தக்காளி. இதில் குறைந்த அளவு மாவுச் சத்து உள்ளதால் நீரிழிவுப் பிணியாளர்களுக்கு அருமையான மருந்துச் சாறாக தக்காளிச் சாறு பயன்படுகிறது. இந்த தக்காளி முகப்பொலிவு மற்றும் இளமையைக் கூட்ட உதவுகிறது. இரத்த சோகை மற்றும் வாயுத் தொல்லையை விலக்குகிறது.

முகத்தைப் பள பளவென வைத்திருக்க சில வழிகள்:

1. ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையை கலந்து கொள்ளவும். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவவும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாக பிரகாசிக்கும்.

2. ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளவும். இதை முகத்துக்குப் பூசி 5 நிமிடம் கழித்து கழுவவும். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.

3. ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். இமைகளின் மேல் இந்த கலவையைப் பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவவும். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தால் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.