பெட் வாங்கப் போறீங்களா கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க. நாம் இந்த நிலைமையில் இருந்தால் வெளியில் சிரித்தாலும் மனதுக்குள் கோபம் வரும் தானே ?????
Sunday, April 20, 2008
Thursday, April 17, 2008
தக்காளி தரும் அழகு:
நாம் அன்றாடம் உணவுக்கு பயன்படுத்தும் காய்களில் தக்காளி பெரும் பங்கு வகிக்கிறது. இது உணவுக்கு சுவை தருவதோடு பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தள தள மேனி தருகிறது இந்த தக்காளி. இதில் குறைந்த அளவு மாவுச் சத்து உள்ளதால் நீரிழிவுப் பிணியாளர்களுக்கு அருமையான மருந்துச் சாறாக தக்காளிச் சாறு பயன்படுகிறது. இந்த தக்காளி முகப்பொலிவு மற்றும் இளமையைக் கூட்ட உதவுகிறது. இரத்த சோகை மற்றும் வாயுத் தொல்லையை விலக்குகிறது.
முகத்தைப் பள பளவென வைத்திருக்க சில வழிகள்:
1. ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையை கலந்து கொள்ளவும். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவவும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாக பிரகாசிக்கும்.
2. ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளவும். இதை முகத்துக்குப் பூசி 5 நிமிடம் கழித்து கழுவவும். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.
3. ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். இமைகளின் மேல் இந்த கலவையைப் பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவவும். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தால் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.
Wednesday, April 9, 2008
புகைப்படப் போட்டிக்கான பதிவு
தனிமையில் இனிமை காண்போர் சிலர், தனிமையை இனிமை ஆக்குவோர் சிலர், தனிமையில் வெறுமை அடைவோர் பலர், தனிமையில் பணி செய்ய விரும்புவோர் சிலர், கட்டாயத்திற்காக தனிமையில் பணி செய்வோர் பலர் . இப்படி தனிமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தைத் தருகிறது. நம் புகைப்பட நாயகன் தனிமையில் பணி செய்தாலும் தனது பணியை நேர்த்தியாக செய்து முடித்திருந்தார்.
இந்த மாத புகைப்படப் போட்டிக்கான தலைப்பு "தனிமை" அதிலே நீங்களும் சேருங்கள் என்று உற்சாகப்படுத்திய இல்லத்தரசிக்கு நன்றி.
Saturday, April 5, 2008
சிரிக்கலாம் வாங்க:
நகைச்சுவை 1:
ஒரு கணினி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் மூன்று சாப்ட்வேர் என்ஜினியர்களையும் மூன்று ஹார்ட்வேர் என்ஜினியர்களையும் ஒரு கணினி மாநாட்டிற்காக அனுப்பினர். அவர்கள் அனைவரும் ரயிலில் பயணம் செய்ய முடிவெடுத்தனர். ஹார்ட்வேர் என்ஜினியர்கள் மூன்று டிக்கெட் வாங்கினர் . சாப்ட்வேர் என்ஜினியர்கள் ஒரே ஒரு டிக்கெட் வாங்கினர். இதைக் கவனித்த ஹார்ட்வேர் என்ஜினியர்கள், ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வருவார் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் என்றனர்.
அவர்கள் கூறியது போலவே டிக்கெட் பரிசோதகர் வந்தார். சாப்ட்வேர் என்ஜினியர்கள் மூன்று பெரும் கழிவறையில் ஒளிந்து கொண்டனர். டிக்கெட் பரிசோதகர் வந்து கதவைத் தட்டி டிக்கெட் கேட்டார். அவர்கள் ஒரு டிக்கெட்டை கதவின் அடி வழியாக கொடுத்தனர். டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை பரிசோதித்து விட்டு திருப்தியாக சென்றார். சாப்ட்வேர் என்ஜினியர்களின் இந்தச் செயல், ஹார்ட்வேர் என்ஜினியர்களைக் கவர்ந்தது.
மாநாடு முடிந்து மீண்டும் ரயிலில் பயணம் செய்வதற்காக ரயில் நிலையத்தை அடைந்தனர். இந்த முறை ஹார்ட்வேர் என்ஜினியர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள் முன்பு செய்தது போல நாம் ஒரே ஒரு டிக்கெட் வாங்கலாம் என்று முடிவெடுத்து ஒரு டிக்கெட் வாங்கினர். ஆனால் இந்த முறை சாப்ட்வேர் என்ஜினியர்கள் டிக்கெட் எதுவும் வாங்கவில்லை. இதைக் கவனித்த ஹார்ட்வேர் என்ஜினியர்கள், ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வருவார் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் என்றனர்.
அவர்கள் கூறியது போலவே டிக்கெட் பரிசோதகர் வந்தார். இந்த முறை ஹார்ட்வேர் என்ஜினியர்கள் மூன்று பெரும் கழிவறையில் ஒளிந்து கொண்டனர். சாப்ட்வேர் என்ஜினியர்களில் ஒருவர் கழிவறைக்குச் சென்று கதவைத் தட்டி டிக்கெட் கேட்டார். ஹார்ட்வேர் என்ஜினியர்கள் டிக்கெட் பரிசோதகர் தான் டிக்கெட் கேட்கிறார் என்று நினைத்து டிக்கெட்டைக் கொடுத்தனர். சாப்ட்வேர் என்ஜினியர்கள் மூன்று பெரும் அடுத்தக் களிவறைக்குச் சென்று ஒளிந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)