Sunday, September 14, 2008

முட்டை தொக்கு:


தேவையான பொருட்கள்:

முட்டை - 2 எண்ணம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

தனியா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மல்லித் தழை - சிறிது

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இவற்றை நீள வாக்கில் நறுக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும். மல்லித் தழையையும் பொடியாக நறுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலையை சேர்க்கவும். அதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். நன்கு வெந்தபிறகு தீயை அணைத்து விட்டு வேக வைத்த முட்டைகளை ஒரு சில இடங்களில் கீறி வேக வைத்த கலவையுடன் சேர்க்கவும். முட்டைகளை ஒரு சில இடங்களில் கீறினால் தான் மசாலா முட்டையின் உள் சென்று சாப்பிடும் பொது நன்றாக இருக்கும். இறுதியில் நறுக்கிய மல்லித் தழையைச் சேர்த்து பரிமாறவும்.
இந்த முட்டை தொக்கு ஆப்பம், சப்பாத்தி, சாதம் போன்றவைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

3 comments:

Illatharasi said...

சூப்பர் ...... எனக்கு பிடித்த ஒன்று ...... :)

ஒரு சந்தேகம் ....
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

தனியா தூள் அதிகமாக சேர்க்க வேண்டுமா இல்லை தட்டச்சு பிழையா?

MJS said...

தட்டச்சு பிழை அல்ல. தனியா தூள் அதிகமாக சேர்க்கவேண்டும். இஞ்சி சேர்த்திருப்பதால் மிளகாய்த் தூள் கொஞ்சம் போதும்.

Anonymous said...

hm.. funny thread.