ஓவியம் வரைவது எனக்கு மிகவும் பிடித்தமான ஓன்று. மிகவும் பிடித்தமான ஓன்று என்றாலும் நான் இதுவரை நிறைய படங்கள் வரைந்துவிடவில்லை. திருமணத்திற்கு முன்பு நான் வரைந்த படங்கள் இன்னும் என் பெற்றோரின் வீட்டில் இருக்கிறது. முன்பு வரைந்த படங்கள் பேப்பர், பென்சில், வண்ணங்கள் போன்றவற்றை பயன்படுத்தி வரைந்தேன். திருமணத்திற்கு பிறகு ஓவியம் வரையும் பழக்கத்தை தொடர, அதுவும் கம்பியூட்டரில் Paint Brush ல் படம் வரைய காரணமாக அமைந்தவர் எனது உறவுக்காற சிறுவன். அவனுக்கு வண்ணத்துப் பூச்சி என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் ஒரு வண்ணத்துப் பூச்சியின் படத்தைக் கொண்டு வந்து அதைப் போன்று கம்பியூட்டரில் Paint Brush ல் வரையுமாறு கேட்டான். நான் அவனிடம் இந்த வண்ணத்துப் பூச்சி கம்பியூட்டரில் Paint Brush ல் வரைய மிகவும் கஷ்டம் எனவே வரைய முடியாது என்று கூறினேன். ஆனால் அவனோ முடியாது கண்டிப்பாக வரைய வேண்டும் என்று அடம் பிடித்தான். வேறு வழி இல்லாமல் அவனுக்காக வரைய ஆரம்பித்தேன். முடிவில் நான் எதிர்பார்த்ததை விட நன்றாகவே படம் இருந்தது. அந்தப் படம் இது தான்.
பேப்பர் மற்றும் பென்சில் பயன்படுத்தி படம் வரைவதற்கும் கம்பியூட்டரில் Paint Brush ல் படம் வரைவதற்கும் நிறைய வித்தியாசங்கள் என்னால் உணர முடிந்தது. கம்பியூட்டரில் Paint Brush ல் ஒரு நன்மை என்னவென்றால் ஒரு படம் வரைந்து விட்டால் அதை copy, paste செய்தால் இன்னொரு படம் கிடைத்துவிடும். இரண்டாவதாக Paint Brush ல் வரைந்த படம் படரும் கொடி. இது என் கற்பனையில் உருவானது.
அன்று ஒரு நாள் என் மன்னவன் வேலை முடிந்து வீட்டிற்கு வர இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடும் என்று கூறியதால் அது வரை தூக்கமும் வராதே என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் படம் வரையலாம் என்று தோன்றியது. அப்பொழுது என் கற்பனையில் உருவானது தான் இந்தப் படம். அடுத்ததாக வரைந்த படம் இரு கிளிகள்.
இந்தக் கிளிகள் படம் ஒரு வாரஇதழில் வெளி வந்திருந்தது. அதைப் பார்த்து வரைந்தது. இந்தக் கிளிகள் நன்றாக வரைந்துள்ளேன் என்று தோழி ஒருவர் என்னைப் பாராட்டினார். வெகு நாள்களாக இயற்கை காட்சி ஒன்று வரைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கான நேரம் இப்போது தான் வந்ததோ என்னவோ இயற்கை காட்சி படம் ஒன்று கண்ணில் பட்டது.
அதை அப்படியே வரையலாம் என்று மிகவும் முயற்சி செய்தேன். ஆனால் அந்த இயற்கை காட்சியில் உள்ள மரத்தைப் போன்று நான் வரைந்த மரம் வரவில்லை. இருந்தாலும் நன்றாகவே இருப்பது போல் எனக்கு தோன்றியது.