இந்த மாத புகைப்படப் போட்டியின் தலைப்பு " அன்றாட வேலையினூடே ஒரு நாள்". இந்த தலைப்புக்கு பொருந்தும் புகைப்படம் என்னிடம் இல்லையென்பதால் தலைப்புக்கு பொருந்தும் படியான காட்சிகளை கிளிக் செய்ய காத்திருந்தேன். இறுதியில் ஒரு புகைப்படத்தை கிளிக் செய்து அனுப்பியாச்சு. எனக்கு ஒரு வினோத பழக்கம் உண்டு. பத்திரிகை படிக்கும் பொழுது அதில் போடும் சில படங்கள் என்னைக் கவரும். அந்தப் படங்களை எனது கணினியில் சேமித்து வைக்கும் பழக்கம் தான் அது. அப்படி 2008 பிப்ரவரி, 2008 ஏப்ரல் மாதங்களில் வந்த படங்கள் இந்த போட்டிக்கு மிகவும் பொருத்தமான படங்கள். அவை உங்கள் பார்வைக்கு:

