தேனை விரும்பாதோர் இல்லை. பொதுவாக இனிப்பு உடலுக்கு தீங்கானது என்பதை நாம் அறிவோம். ஆனால் தேன் இனிப்பு சுவை உடையதாக தெரிந்தாலும் உண்மையில் அது காரத் தன்மை கொண்டது. தேனில் 80% காரம் மற்றும் 20% அமிலம் கலந்து உள்ளது. தேனை அருந்தியவுடனே அது இரத்தத்தில் கலக்கும். விளையாட்டுத் துறை அன்பர்கள் இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும் வல்லமை தேனில் உள்ளது. கழிவே இல்லாத உணவு தேன்.
தேன் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. கண் ஒளியைக் கூட்டும் சக்தி தேனில் உள்ளது. உடல் பருமன், தொப்பை உடையவர்கள் சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும். நோஞ்சான் அன்பர்கள் தேனை தினமும் இரவு பாலுடன் அல்லது நீரில் கலந்து அருந்தி வர உடல் எடை பெறுவர். இதயம், ஈரல் போன்றவை பலம் பெறும். நோயாளிகள், சிறுவர்களுக்கு ஏற்ற உணவு இந்த தேன்.
தேனை எவ்வாறு சாப்பிட வேண்டும், எவற்றுடன் தேன் சேரக்கூடாது என்பதை இனி பார்க்கலாம்.
* தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.
* தண்ணீரில் அல்லது பழச்சாறுகளில் கலந்து தான் சாபிடவேண்டும்.
* தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது.
* தேனும் நெய்யும் கலக்கக்கூடாது. கலந்தால் நஞ்சாகும்.
* தேனும் முட்டையும் கலக்கக்கூடாது.
* தேனும் சீனியும் கலக்கக்கூடாது.

4 comments:
//விளையாட்டுத் துறை அன்பர்கள் இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும் வல்லமை தேனில் உள்ளது//
//நோஞ்சான் அன்பர்கள் தேனை தினமும் இரவு பாலுடன் அல்லது நீரில் கலந்து அருந்தி வர உடல் எடை பெறுவர்//
இதுல எதுவும் உள் குத்து இல்லையே?
//தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.//
உறிஞ்சா என்ன? வண்டு, பட்டாம் பூச்சி எல்லாம் அப்படி தானே சாப்பிடுதுங்க;)
//தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது//
அப்போ இது? "சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்"
நல்ல குறிப்புகளா சொல்லிருகிறீர்கள். எனக்கு சில குறிப்புகள் புதியவை.
வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுதுங்கள் ;)
வாங்க சத்யா!!! இதுல எந்த உள் குத்தும் இல்லை.
//தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.//
//உறிஞ்சா என்ன? வண்டு, பட்டாம் பூச்சி எல்லாம் அப்படி தானே சாப்பிடுதுங்க;) //
மனிதர்கள் தேனை தனியாக சாப்பிடக்கூடாது என்பது தான் பொருள். மனிதர்களுக்கும் பூச்சி இனங்களுக்கும் வித்தியாசம் உண்டல்லாவா???
//தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது//
//அப்போ இது? "சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்" //
தேனை தனியாக சூடாக்கக் கூடாது. சுடு நீரில் கலக்கலாம்.
நன்றி இல்லத்தரசி!!!
//வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுதுங்கள் ;) //
முயற்சி செய்கிறேன்.
Post a Comment