Tuesday, March 18, 2008

என்னை கவர்ந்த நகைச்சுவைகள் :-)

" Make them laugh help them learn" என்ற புத்தகத்தில் என்னை கவர்ந்த சில நகைச்சுவைகள் :-

நகைச்சுவை ஒன்று :

இரு பெரிய செல்வந்தர்கள் பேசிக்கொண்டிருந்தனர். முதல் செல்வந்தர் சொன்னார், என்னுடைய கார் ஓட்டுநர் ஒரு முட்டாள் அதை நிரூபிக்கிறேன் பார் என்று சொல்லி தனது ஓட்டுநரை அழைத்து பத்து ரூபாயை கொடுத்து ஒரு புதிய "Mercedes Benz" கார் வாங்கி வா என்று சொன்னார். கார் ஓட்டுநரும் "சரி ஐயா" என்று சொல்லி விடை பெற்றான். சரி இப்பொழுது என்னுடைய கார் ஓட்டுநரின் முட்டாள்தனத்தை பார் என்று சொல்லி தன்னுடைய ஓட்டுநரை இரண்டாவது செல்வந்தர் அழைத்து "என்னுடைய வீட்டிற்கு சென்று நான் அங்கே இருக்கிறேனா என்று பார்த்து வா என்று சொன்னார். கார் ஓட்டுநரும் "சரி ஐயா" என்று சொல்லி விடை பெற்றான்.

விடை பெற்ற இரு ஓட்டுநர்களும் வழியில் சந்தித்துக் கொண்டனர். முதல்வன் சொன்னான் என்னுடைய முதலாளி ஒரு முட்டாள், அவர் என்னிடம் பத்து ரூபாய் தந்து "Mercedes Benz" கார் வாங்கி வரச் சொன்னார். இன்று ஞாயிற்றுகிழமை கார் showroom மூடியிருக்கும் என்று கூடத் தெரியாத முட்டாளாக இருக்கிறார் என்று சொன்னான்.

இரண்டாமவன் சொன்னான் அது பரவாயில்லை என்னுடைய முதலாளி என்னிடம் அவர் வீட்டிற்கு சென்று அவர் அங்கே இருக்கிறாரா என்று பார்த்து வரச் சொன்னார், அவர் கையில் செல் போன் வைத்திருக்கிறார் அவரே வீட்டிற்கு போன் செய்து அவர் அங்கே இருக்கிறாரா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாமே அது கூட தெரியாத முட்டாளாக இருக்கிறார் என்றான்.

நகைச்சுவை இரண்டு :

இரு என்ஜின்களைக் கொண்ட ஒரு ரயில் வண்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. ஒரு மணி நேரம் கழித்து ரயில் ஒட்டுநர் பயணிகளுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டார். " பயணிகளே உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் ஒரு நல்ல செய்தியும் சொல்லபோகிறேன். கெட்ட செய்தி என்னவென்றால் ரயில் வண்டியில் உள்ள இரு என்ஜின்களில் ஒரு என்ஜின் பழுதாகிவிட்டது. நல்ல செய்தி என்னவென்றால் அடுத்த என்ஜின் நன்றாக இருப்பதால் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம் " என்றார். ரயில் வண்டி தனது பயணத்தை தொடர்ந்தது.

இன்னொரு மணி நேரம் கழிந்து ரயில் ஓட்டுநர் மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். " பயணிகளே உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் ஒரு நல்ல செய்தியும் சொல்லபோகிறேன். கெட்ட செய்தி என்னவென்றால் இரண்டாவது எனஜினும் பழுதாகிவிட்டது. நல்ல செய்தி என்னவென்றால் இது ரயில் வண்டி, விமானம் அல்ல "

நகைச்சுவை மூன்று :

ஒருவர் தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார் . ரயில் நிலையத்தை அடைந்த அவர் அங்கே ஒரு பிச்சைக்காரன் மல்லாந்து ( முதுகு பகுதி தரையில் படும்படியாக ) படுத்துக்கொண்டே சத்தமாக பாடிக்கொண்டே இருந்ததை பார்த்தார் . அந்த பிச்சைக்காரனுக்கு சில நாணயங்களை தர்மம் செய்து விட்டு சென்றார்.

அலுவலகம் முடிந்து திரும்பி வரும் போது அதே பிச்சைக்காரனை பார்த்தார். இப்போது அவன் மார்பு பகுதி தரையில் படும்படியாக படுத்துக்கொண்டே சத்தமாக பாடிக்கொண்டே இருந்தார். அவனுடைய இந்த வினோத செயலைப் பார்த்து, காலையில் மல்லாந்து படுத்துக்கொண்டே பாடிக்கொண்டிருந்தாய் இப்பொழுது மார்பு பகுதி தரையில் படும்படியாக படுத்துக்கொண்டே பாடிக்கொண்டிருக்கிறாயே ஏன் ? என்று கேட்டார். அதற்கு அந்த பிச்சைக்காரன் காலையில் காசெட்டின் ஏ பக்கம் ( A side ) பாடிக் கொண்டிருந்தேன். இப்பொழுது காசெட்டின் பி பக்கம் ( B side ) பாடிக் கொண்டிருக்கேன் என்றான்.

1 comment:

Illatharasi said...

சூப்பர் ஜில் ஜில்!!! :-)
முட்டாள்கள் ஜோக் சூப்பர். அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.