இந்த வீடியோவை பார்க்கும் போது ஏதோ பறவைகள் சரணாலையத்தைப் பார்ப்பது போல் இருக்கும். ஆனால் இது மனிதர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு. அடுக்குமாடி குடியிருப்புக்குப் பின்னால் இருக்கும் மரங்கள் தான் இந்தப் பறவைகளின் குடியிருப்பு. இரவு மணி 6.45 லிருந்து ஒவ்வொரு பறவையாக வரத் துவங்கும் இவை, அனைத்துப் பறவைகளும் வரும் வரை வானில் வட்டமடித்துக்கொண்டிருக்கும். அனைத்து பறவைகளும் வந்த பிறகு ஒவ்வொரு மரத்திலும் சென்று அமரும். இந்தப் பறவைகள் வந்தமரும் மரங்கள் கார் பார்கிங் இடத்தில் இருப்பதால் இந்தப் பறவைகளின் அபிசேகதிற்கு பயந்து கார் ஓட்டுநர்கள் தங்கள் கார்களை இங்கு நிறுத்தவே இல்லை.
இரவு நேரத்தில் பறவைகள் அமர்ந்திருக்கும் மரங்களைப் பார்த்தால் மரங்களில் ஏதோ காய் காய்த்திருப்பது போன்று இருக்கும். இரவு நேரத்திற்கு தங்களது குடியிருப்பை மனிதர்களின் குடியிருப்பிற்கு மிக அருகில் தேர்ந்து எடுத்த இந்தப் பறவைகள் அதிகாலை 5 மணிக்கே பறந்து சென்று விடும். மீண்டும் மாலை 6.45 மணிக்கு ஒவ்வொன்றாக வரத்துவங்கும்.
இந்தப் பறவைகளின் வருகை முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு குடியிருப்பு வாசிகளுக்கு வினோதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாலும் பறவைகளின் அபிசேகத்தால் கார் ஓட்டுநர்களுக்கு தங்கள் காரை நிறுத்தமுடியவில்லை. பறவைகளின் அபிசேகத்தால் வந்த வாடை குடியிருப்பு வாசிகளுக்கு அருவருப்பைத் தந்தது. குடியிருப்பு துப்புரவாளருக்கு தினமும் பறவைகளின் அபிசேகத்தை கழுவி சுத்தம் செய்யும் வேலை.
இரவு நேரத்திற்கு தங்களது குடியிருப்பை மனிதர்களின் குடியிருப்பிற்கு மிக அருகில் தேர்ந்து எடுத்த இந்தப் பறவைகள் தாங்கள் மனிதர்களுக்கு பலவிதங்களில் இடையூறாக இருப்பதை ஐந்தறிவு கொண்ட இந்த ஜீவன்கள் உணர்ந்திருக்க நியாயமில்லை தான்.
2 comments:
பறவைகள் போட்டோஸ் நல்ல இருந்தது. அனைத்து போடோக்களும் அருமை. சிநீசே கார்டன் போடோஸ் எல்லாம் சூப்பர்.
நன்றி கலைமகள்!!!!
Post a Comment