Showing posts with label home remedy for cold and cough. Show all posts
Showing posts with label home remedy for cold and cough. Show all posts

Friday, February 2, 2024

துளசி டீ/துளசி தீநீர்/தேநீர்/Holy Basil tea for cough

இருமல் இருக்கும் போது இந்த தீநீர் குடித்து வந்தால் எளிதில் குணமாகும். இந்தத் தீநீர் செய்வது மிக எளிது.துளசியில் கருந்துளசி, வெள்ளைத்துளசி என்று 2 வகைகள் உள்ளன. இருவகை துளசியும் இந்த தீநீர் தயாரிக்க பயன்படுத்தலாம். துளசி இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்தி டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 



தேவையான பொருள்கள்

துளசி இலைகள் -10

ஏலக்காய் - 2

செய்முறை

துளசி இலைகளை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். கழுவிய இலைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து பின் ஏலக்காயையும் தட்டிச் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். தண்ணீர் கொதித்த பின் 3-4 நிமிடங்கள் வைத்திருந்து பின் வடிகட்டி குடிக்கவும். 

Ingredients

10 basil leaves

2 cardamom pods

Method

Clean and wash the basil leaves. Take a pot and add washed basil leaves and 1 cup of water. Crush the cardamom and add to it. Bring it to boil in medium heat. After boiling for 3-4 minutes, strain it and drink it.

Wednesday, August 23, 2023

சுக்கு மல்லி காபி/Dried Ginger and Coriander Coffee

சளித்தொல்லை, தொண்டைவலி, இருமல் இருக்கும்பொழுது இந்த சுக்கு மல்லி காபி தொண்டைக்கு இதமாகவும் அதே நேரத்தில் ஒரு நிவாரணியாகவும் திகழ்கிறது. துளசி இலைகள் சேர்ப்பதால் இருமலை குறைக்கும் ஒரு வீட்டு மருந்தாகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள்

சுக்கு துண்டு - 1 இஞ்ச் அளவு

முழுமல்லி - 1/2 டீஸ்பூன்

முழுமிளகு - 1/4 டீஸ்பூன்

முழுசீரகம் - 1/4 டீஸ்பூன்

துளசி இலை - 10 எண்ணம்

கருப்புக்கட்டி - ஒரு எலுமிச்சம்பழ அளவு

தண்ணீர் - 2 கப்

செய்முறை

சுக்கு,மல்லி,மிளகு,சீரகம் போன்றவற்றை தனித்தனியே இடிகல்லில் போட்டு கொரகொரப்பாக இடித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்து அதை சூடாக்கவும். பின் அதில் கருப்புக்கட்டி சேர்க்கவும். 

ஒரு கொதிவந்ததும் அதில் இடித்துவைத்துள்ள சுக்கு,மல்லி,மிளகு,சீரகத்தை சேர்க்கவும். பின் அதனுடன் துளசி இலைகளை சேர்த்து ஒரு கரண்டி வைத்து கலக்கவும். கரண்டி வைத்து கலக்கும் போது கருப்புக்கட்டி கரையாமல் இருந்தால் கூட கரைந்துவிடும்.

3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். 3 நிமிடங்கள் கழித்து சுக்கு மல்லி காபி குடிப்பதற்கு தயாராக இருக்கும். 3 நிமிடங்கள் காத்திருப்பதால் கருப்புக்கட்டியில் உள்ள சிறு அழுக்குகள் அடியில் தங்கிவிடும்.சல்லடை வைத்து அரித்து குடிக்கவும்.