Showing posts with label coconut chutney. Show all posts
Showing posts with label coconut chutney. Show all posts

Saturday, June 14, 2025

Foxtail Millet Adai with Coconut chutney/தினை அடை மற்றும் கெட்டித் தேங்காய் சட்னி



தினை அடை

தேவையான பொருள்கள்

தினை - 1 கப்

சாம்பார் பருப்பு -1/3 கப்

கடலைபருப்பு -1/3 கப்

பாசி பருப்பு -1/3 கப்

சீரகம் - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்றவாறு)

இஞ்சி - சிறிய துண்டு

உப்பு -தேவைக்கு

செய்முறை

தினையை நன்றாகக் கழுவி சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும். கடலைப்பருப்பு,சாம்பார் பருப்பு,பாசி பருப்பு இவற்றையும் நன்றாகக் கழுவி சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும். இந்த பருப்புகளுடன் காய்ந்த மிளகாயையும் சேர்த்து ஊறவைக்கவும். தினையும், பருப்பு வகைகளும் நன்கு ஊறிய பின் மிக்ஸி  அல்லது கிரண்டரில் அவற்றைச் சேர்க்கவும். அவற்றுடன் உப்பு, சீரகம்,இஞ்சி சேர்த்து நன்றாக மையாக இல்லாமலும் நன்றாக கொரகொரப்பாக இல்லாமலும் இருக்கும் வகையில் அரைத்துக் கொள்ளவும்.இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான, இட்லி மாவு பக்குவத்தில் கலந்து கொள்ளவும்.தோசைக் கல்லைச் சூடாக்கி அடை சுட்டு எடுக்கவும்.

தேங்காய் சட்னி

தேவையான பொருள்கள்

தேங்காய் - 3/4 கப்
பொரி கடலை - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - சிறிய தண்டு
பச்சைமிளகாய் -1 (காரத்திற்கு ஏற்றவாறு)
உப்பு - தேவைக்கு 

தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்டேபிள்பூன்
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

தேங்காய், பொரி கடலை, இஞ்சி, பச்சைமிளகாய்,உப்பு ஆகியவற்றை மக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இது கெட்டி சட்னி என்பதால் அதிக தண்ணீர் சேர்க்கக்கூடாது. அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். பின்பு ஒரு வாணலாயை அடுப்பில் வைத்து சூடாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து வெடித்தவுடன் கறிவேப்பலைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவும். இப்பொழுது கெட்டித் தேங்காய் சட்னி தயார்.