Friday, March 15, 2024
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
Tuesday, March 12, 2024
பச்சைப்பயறு கஞ்சி/Green bean Porridge
பச்சைப்பயறு கஞ்சி சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. எல்லா வகையான துவையலும் இந்த கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள ஏதுவாகும். துவையல் இல்லையென்றாலும் வறுத்த நிலக்கடலை,ஊறுகாய் அல்லது ஏதாவது அப்பளம் இருந்தாலும் இந்தக் கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள ஏதுவாகும். சோறு வடிக்கும் நேரத்தில் இதை செய்து முடித்துவிடலாம். காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் சாப்பிடலாம். பெண்களுக்கு உடல் நலமில்லாத நேரத்தில் சட்டென ஒரு சமையல் செய்து முடிக்க வேண்டுமென்றால் இந்தக் கஞ்சி கை கொடுக்கும். அவரவர் சுவைக்கேற்றவாறு கஞ்சியின் தண்ணீர் அளவை மாற்றிக்கொள்ளலாம். சற்று கெட்டியாக விரும்புபவர்கள் தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்
பச்சைப்பயறு - 1/2 கப்
பொன்னி புழுங்கல் அரிசி - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 15 பல்(சிறியது)
தேங்காய்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சோறு வடிக்கும் அளவு தண்ணீர் (சுமார் 8 கப்) எடுத்துக் கொதிக்க வைக்கவும். பச்சைப்பயறை 3 முறை கழுவி, கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும். பச்சைப்பயறு சேர்த்து கொதித்த பின், 5 நிமிடங்கள் கழித்து, அரிசியை 3 முறை கழுவி சேர்க்கவும். அதனுடன் வெந்தயம் மற்றும் பூண்டு சேர்த்து வேக வைக்கவும். அரிசியும் பச்சைப் பயறும் நன்றாக வெந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பரிமாறுவதற்கு முன் தேங்காய் சேர்த்து பரிமாறவும்.
Green bean porridge is not only tasty but also healthy. This porridge can be consumed anytime in a day. If one wants to cook a quick meal, this porridge will come in handy. You can change the amount of water in the porridge according to your taste. Those who prefer it slightly thicker should reduce the amount of water.
Ingredients
Green Bean - 1/2 cup
Parboiled rice - 1/2 cup
Fenugreek - 1 tsp
Garlic - 15 cloves (small size)
Grated coconut – 4 tbsp
Salt – as needed
Recipe
Boil water (about 8 cups) in a pot. Wash green beans 3 times and add to boiling water. After 5 minutes, wash the rice 3 times and add it to the boiling green bean. Add fenugreek and garlic to it and cook. When the rice and green bean are cooked well, remove from the stove and mix with required amount of salt. Garnish with coconut before serving.