தினை அடை
தேவையான பொருள்கள்
தினை - 1 கப்
சாம்பார் பருப்பு -1/3 கப்
கடலைபருப்பு -1/3 கப்
பாசி பருப்பு -1/3 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்றவாறு)
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு -தேவைக்கு
தினை அடை
தேவையான பொருள்கள்
தினை - 1 கப்
சாம்பார் பருப்பு -1/3 கப்
கடலைபருப்பு -1/3 கப்
பாசி பருப்பு -1/3 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்றவாறு)
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு -தேவைக்கு
பச்சைப்பயறு கஞ்சி சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. எல்லா வகையான துவையலும் இந்த கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள ஏதுவாகும். துவையல் இல்லையென்றாலும் வறுத்த நிலக்கடலை,ஊறுகாய் அல்லது ஏதாவது அப்பளம் இருந்தாலும் இந்தக் கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள ஏதுவாகும். சோறு வடிக்கும் நேரத்தில் இதை செய்து முடித்துவிடலாம். காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் சாப்பிடலாம். பெண்களுக்கு உடல் நலமில்லாத நேரத்தில் சட்டென ஒரு சமையல் செய்து முடிக்க வேண்டுமென்றால் இந்தக் கஞ்சி கை கொடுக்கும். அவரவர் சுவைக்கேற்றவாறு கஞ்சியின் தண்ணீர் அளவை மாற்றிக்கொள்ளலாம். சற்று கெட்டியாக விரும்புபவர்கள் தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்
பச்சைப்பயறு - 1/2 கப்
பொன்னி புழுங்கல் அரிசி - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 15 பல்(சிறியது)
தேங்காய்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சோறு வடிக்கும் அளவு தண்ணீர் (சுமார் 8 கப்) எடுத்துக் கொதிக்க வைக்கவும். பச்சைப்பயறை 3 முறை கழுவி, கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும். பச்சைப்பயறு சேர்த்து கொதித்த பின், 5 நிமிடங்கள் கழித்து, அரிசியை 3 முறை கழுவி சேர்க்கவும். அதனுடன் வெந்தயம் மற்றும் பூண்டு சேர்த்து வேக வைக்கவும். அரிசியும் பச்சைப் பயறும் நன்றாக வெந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பரிமாறுவதற்கு முன் தேங்காய் சேர்த்து பரிமாறவும்.
Green bean porridge is not only tasty but also healthy. This porridge can be consumed anytime in a day. If one wants to cook a quick meal, this porridge will come in handy. You can change the amount of water in the porridge according to your taste. Those who prefer it slightly thicker should reduce the amount of water.
Ingredients
Green Bean - 1/2 cup
Parboiled rice - 1/2 cup
Fenugreek - 1 tsp
Garlic - 15 cloves (small size)
Grated coconut – 4 tbsp
Salt – as needed
Recipe
Boil water (about 8 cups) in a pot. Wash green beans 3 times and add to boiling water. After 5 minutes, wash the rice 3 times and add it to the boiling green bean. Add fenugreek and garlic to it and cook. When the rice and green bean are cooked well, remove from the stove and mix with required amount of salt. Garnish with coconut before serving.
தேவையான பொருள்கள்
தக்காளி - 3
பூண்டு - 8 பல்(சிறியது)
மிளகு - 1 & 1/2 டீ ஸ்பூன்
சீரகம் -1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு- 1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை
மிளகு, சீரகம் இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
பின்னர் அவற்றுடன் பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் 2 தக்காளி(தக்காளியை 4 துண்டுகளாக வெட்டிச் சேர்க்கவும்) சேர்த்து ஒரு சுற்று மட்டும் மிக்ஸியில் ஓட விடவும்.
இறுதியாக மீதி இருக்கும் ஒரு தக்காளியை 4 துண்டுகளாக வெட்டி அரைத்து வைத்துள்ள கலவையுடன் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இவ்வாறு செய்வதால் பாதி தக்காளி நன்றாக அரைந்தும் மீதி தக்காளி ஒன்றும் பாதியாக அரைந்தும். கிடைக்கும்.
வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து உடனே அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி இலையை சிறிதாக நறுக்கி சேர்க்கவும். ரசம் கொதி வந்த பிறகு ஓரிரு நொடிகள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு
இந்த ரசத்தில் புளி சேர்க்காததால் சமைத்த அன்றே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அடுத்த நாள் வைத்திருந்தால் கெட்டுப்போக வாய்ப்பு அதிகம்.
Ingredients
Tomatoes - 3
Garlic - 8 cloves (small size)
Pepper - 1 & 1/2 tsp
Cumin - 1 tea spoon
Turmeric powder – 1/4 teaspoon
Asafoetida powder - a pinch
Salt - as required
Oil - 1 tablespoon
Mustard- 1/4 tea spoon
Curry leaves – a little
Coriander leaves - a little
Method
Add pepper and cumin seeds in a mixing jar and grind them coarsely.
Then add garlic, turmeric powder, asafoetida powder and 2 tomatoes (cut the tomatoes into 4 pieces and add them) and let it run in the mixer for one round.
Finally, cut the remaining tomato into 4 pieces and add it to the ground mixture and take it again in the mixer. By doing this, half of the tomatoes will be finely ground, and the rest of the tomatoes will be half ground.
Heat a pan and add oil, and mustard once the oil is hot. Once the mustard seeds splutter, add the curry leaves and immediately add the ground mixture and saute for two minutes.
Then add required amount of water and salt. Add finely chopped coriander leaves. Once the rasam boils, take it off the stove after a couple of seconds. Serve with hot rice.
Note
Since no tamarind is added to this rasam, it should be consumed on the same day it is cooked. There is a high chance of spoilage if kept the next day.
தேவையான பொருள்கள்
பீட்ரூட் - 1
சாம்பார் வெங்காயம் - 5
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் -1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு- 1/4 டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
பீட்ரூட்டைக் கழுவி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தின் தோலை அகற்றி சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியைச் சூடாக்கி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பெருங்காயப்பொடி சேர்த்துக் கிளறி பின் வெட்டி வைத்துள்ள சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சாம்பார் வெங்காயம் வதங்கிய பின் அரிந்து வைத்தள்ள பீட்ரூட் சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். பீட்ரூட் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். இடையிடையே பீட்ரூட்டைக் கிளறி விட்டு வேகவைக்கவும்.
பீட்ரூட் வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் தூள் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பீட்ரூட் வெந்து தண்ணீர் வற்றியவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Ingredients
Beetroot – 1
Shallots – 5
Coconut(grated) - 3 tablespoon
Cumin - 1/2 tea spoon
Turmeric powder – 1/4 teaspoon
Chilli powder - 1/4 teaspoon
Salt - as required
Coconut oil – 1 tablespoon
Mustard- 1/4 tea spoon
Black gram - 1 tablespoon
Asafoetida powder – a pinch
Curry leaves – a little
Recipe
Wash, peel the beetroot skin and cut into small pieces. Remove the skin of the shallots and finely chop it.
Heat a pan and add coconut oil. Once oil is hot add mustard. Once the mustard seeds splutter, add the urad dal and fry until golden brown.
Stir in the asafoetida powder and then add the chopped shallots and saute. After sauteing the shallots, add chopped beetroot and saute.
Add turmeric powder and salt to it and stir. Add required amount of water to cook beetroot and cover . Stir the beetroot occasionally.
While the beetroot is cooking, add grated coconut, cumin and chili powder and grind it coarsely in a mixer.
Once the beetroot is cooked and the water is drained, add the grated coconut mixture and curry leaves and stir.
Cook for 2 minutes and remove from oven. Serve with hot rice.
முடக்கத்தான் கீரை / முடக்கறுத்தான் கீரை பெயருக்கு ஏற்றவாறே முடக்கை அறுக்கக்கூடியது. அதாவது முடக்குவாதத்தைப் போக்கக்கூடியது. கிராமங்களில் புற்களோடு வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். வாரத்தில் 3 நாட்கள் முடக்கத்தான் கீரை சூப்/முடக்கறுத்தான் கீரை மற்றும் பிரண்டை சாப்பிட்டு வர கைகால் மூட்டு வலிகள் குணமாகும். பிரண்டை சட்னி ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன். அதைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.
தேவையான பொருள்கள்
முடக்கத்தான் கீரை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 3
பூண்டு பல் -3
இஞ்சி - 1 சிறிய துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 5
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தக்காளி - 1
செய்முறை
சுத்தம் செய்து கழுவிய முடக்கத்தான் கீரை, சின்ன வெங்காயம்,பூண்டு,இஞ்சி,சீரகம்,மிளகு,மஞ்சள் தூள்,தக்காளி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் 1&1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும். சூடு சிறிது ஆறியபின் ஒரு கரண்டியை வைத்து மசித்துக்கொள்ளவும். பரிமாறும் போது உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும். வடிகட்டி குடிக்கவிரும்புபவர்கள் வடிகட்டி குடிக்கவும்.
Ingredients
Balloon Vine Leaves - 1 handful
Shallots - 3
Garlic clove -3
Ginger - 1 small piece
Cumin - 1 tsp
Pepper corns- 5
Turmeric powder – a pinch
Tomato - 1
Recipe
Take the cleaned and washed balloon vine leaves, shallots, garlic, ginger, cumin, pepper corns, turmeric powder and tomato in a vessel and add 1&1/2 cup of water to it and boil it. Simmer on medium flame for about 15 to 20 minutes. After the heat cools down a bit, mash it with a spoon. Season with salt and pepper when serving.
இந்த முட்டைக் குழம்பு சாதத்துடன் அல்லது சிற்றுண்டி வகைகளுக்குத் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். இதே செய்முறையை பயன்படுத்தி, முட்டையைத் தனியாக வேகவைத்து குழம்பில் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 2
சின்ன வெங்காயம் - 7 எண்ணம்
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - அரை இஞ்ச் துண்டு
பூண்டு - 4 பல்
தேங்காய் துருவல் - 3/4 கப்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
நட்சத்திரபூ -1
கிராம்பு - 2 எண்ணம்
உப்பு - தே.அளவு
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மல்லி தழை - சிறிது
செய்முறை
செம்பருத்திப்பூ தேநீர் அடிக்கடி உட்கொண்டுவந்தால், இதயம் பலப்படும். பலவகை, பலநிற செம்பருத்தி பூக்கள் இன்று கிடைக்கிறது. ஆனால் ஒற்றை அடுக்கு சிகப்பு நிற பூக்கள் மட்டுமே இந்தத் தேநீர்/தீநீர் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். செம்பருத்தி பூச்செடி அநேக வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு அழகு பூச்செடி. இச்செடி அழகு மட்டும் அல்ல ஆரோக்கியத்தையும் தரக்கூடியது.
தேவையான பொருள்கள்
செம்பருத்திப் பூ - 4
பனங்கற்கண்டு - இனிப்புக்கேற்றவாறு
தண்ணீர் - 1 கப்
செய்முறை
செம்பருத்திப் பூக்களை கழுவிக்கொள்ளவும். கழுவிய பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து அதனுடைய இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் செம்பருத்திப்பூ இதழ்களைச் சேர்த்து சூடாக்கவும். தண்ணீர் கொதித்த பின் பனங்கற்கண்டு சேர்த்து கிளறவும். செம்பருத்திப்பூ இதழ்களின் நிறம் மாறும் வரை அடுப்பில் வைத்திருந்து பின் இறக்கி வடிகட்டவும். செம்பருத்திப்பூ டீ தயார்.
Consuming Hibiscus tea regularly can strengthen the heart. Many varieties and colors of hibiscus flowers are available today. But only single layer red flowers should be used to make this tea/tea.
Ingredients
Hibiscus Flower - 4
Palm candy - as per taste
Water - 1 cup
Recipe
Wash the hibiscus flowers. Take the washed flowers one by one and separate only the petals. Pour water in a pan and add hibiscus petals and heat it. After the water boils, stir in the palm candy. Keep it in the stove until the hibiscus petals change color and then remove and strain. Hibiscus tea is ready to serve.
இருமல் இருக்கும் போது இந்த தீநீர் குடித்து வந்தால் எளிதில் குணமாகும். இந்தத் தீநீர் செய்வது மிக எளிது.துளசியில் கருந்துளசி, வெள்ளைத்துளசி என்று 2 வகைகள் உள்ளன. இருவகை துளசியும் இந்த தீநீர் தயாரிக்க பயன்படுத்தலாம். துளசி இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்தி டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
துளசி இலைகள் -10
ஏலக்காய் - 2
செய்முறை
துளசி இலைகளை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். கழுவிய இலைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து பின் ஏலக்காயையும் தட்டிச் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். தண்ணீர் கொதித்த பின் 3-4 நிமிடங்கள் வைத்திருந்து பின் வடிகட்டி குடிக்கவும்.
தேவையான பொருள்கள்
முள் இல்லாத மீன் துண்டுகள் -250 கிராம்
சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1/2 இஞ்ச் துண்டு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில், சுத்தம் செய்து வைத்துள்ள மீனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். மீன் வெந்துவிட்டதா என்பதை அறிய ஒரு துண்டை வெட்டிப்பார்க்கவும். மீன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை இடிகல்லில் சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து ஒரிரு நிமிடங்கள் வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
தக்காளி மசிந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். இவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும். ஏற்கெனவே மீனில் உப்பு சேர்த்திருப்பதால் சிறிதளவே உப்பு சேர்க்கவும். வேகவைத்த மீன்துண்டுகளை அதிலிருக்கும் தண்ணீரிலிருந்து வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய தண்ணீரை, வதக்கிக்கொண்டிருக்கும் வெங்காயம் தக்காளி மசாலாவுடன் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் வேகவைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் மூடி வைத்து வேகவைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.
மரவள்ளிக்கிழங்கு அதிகமாக கிடைக்கும் காலங்களில் அவற்றை வாங்கி நன்றாகக் கழுவி, தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மொட்டை மாடியில் வெயிலில் காய வைக்கவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் வரை நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொண்டால் சுமார் நான்கு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். எப்பொழுது தேவையோ அப்பொழுது எடுத்து வேக வைத்து சாப்பிடலாம். இவ்வாறு காய வைத்த கிழங்கை வெட்டுக்கிழங்கு என்று அழைப்பார்கள். இந்தக் காய வைத்த வெட்டுக்கிழங்கை மாவு மில்லில் கொடுத்து பொடித்தால் மரவள்ளிக்கிழங்கு மாவு தயார். மரவள்ளிக்கிழங்கு மாவில் கருப்பட்டி சேர்த்து புட்டு செய்து காலை சிற்றுண்டியாகவோ அல்லது மாலை சிற்றுண்டியாகவோ குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவாக அமையும்.
தேவையான பொருள்கள்
மரவள்ளிக்கிழங்கு மாவு - 1 & 1/2 கப்
கருப்பட்டி பொடித்தது - 1/4 கப்
தேங்காய் - 1/4 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பொடித்த கருப்புக்கட்டியைச் சேர்த்து மேற்கூறிய அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கிளறவும். கருப்புக்கட்டி கரையும் வரை அடுப்பில் வைத்திருந்து பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
ஆறிய பின் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டிக்கொள்ளவும். கருப்பட்டியில் மண் அல்லது வேறு ஏதாவது அழுக்குகள் இருந்தால் அவை வடிகட்டியில் வந்து விடும்.
ஒரு பரந்த பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு மாவைக் கொட்டி அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். பின் வடிகட்டி வைத்துள்ள கருப்பட்டித் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். மாவு முழுவதும் நனையும் படி நன்றாக கை வைத்துப் பிசைந்து முடிந்த அளவு பெரிய கட்டிகள் இல்லாமல் உதிரி உதிரியாக பிசையவும். அரிசி மாவைப் போன்றில்லாமல் மிகவும் மென்மையாக இருப்பதால் சிறு சிறு கட்டிகள் ஏற்படும்.
பின் புட்டுக்குடத்தில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதிப்பதற்குள் புட்டுக்குழாயில் முதலில் தேங்காய் சேர்த்து பின் தயார் செய்து வைத்துள்ள மாவைச் சேர்க்கவும். இவ்வாறு தேங்காய் பின் மாவு என்று மாற்றி மாற்றி புட்டுக்குழாய் நிறையும் வரை சேர்க்கவும்.
இப்பொழுது புட்டுக்குழாயை, புட்டுக்குடத்தில் வைத்து வேக வைக்கவும். புட்டுக்குழாயின் மேலிருந்து ஆவி வந்த பிறகு சுமார் 5-7 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான மரவள்ளிக்கிழங்கு மாவு புட்டு தயார்.
To make Tapioca flour
Wash required amount of Tapioca well, remove the skin and
cut it into small pieces and dry it in the sun on the terrace. In this way, if
it is dried well in the sun for a week and stored in airtight containers, it
will not spoil for about four months. You can take it and cook it whenever you
want. Tapioca flour is ready if you grind this in a flour mill. Tapioca flour
mixed with palm sugar and served to children as a morning snack or an evening
snack makes for a delicious yet healthy meal.
For the puttu/steamed cake
Ingredients
Cassava flour/Tapioca flour – 1 & 1/2 cup
Palm sugar - 1/4 cup
Coconut - 1/4 cup
Salt - a pinch
Water - 1/2 cup
Recipe
In a vessel add palm sugar and add the above amount of water
and stir it on the stove. Keep it in the stove until the palm sugar melts and
then remove from the stove and let it cool.
After cooling, filter using a strainer. If there is any dirt
in the palm sugar, it will get into the filter.
Pour the tapioca flour in a wide pan and mix it with salt.
Then add the filtered palm sugar water little by little and stir. Mix well with
your hands so that the dough is completely wet and without any large lumps. As
the tapioca flour is very soft, it will form small lumps which is unavoidable.
Fill the steamer pot with water and switch on the stove.
Before the water boils, lets prepare the puttu maker ready. For that first add
coconut and then add the prepared tapioca flour. Add coconut, flour alternately
until the puttu maker is full.
Now put the puttu maker on top of the steamer and steam it.
After the steam comes from the top of the puttu maker, steam it for about 5-7
minutes. Now the delicious tapioca flour puttu/cake is ready.
பிரண்டை மருத்துவக் குணமுள்ள ஒரு கொடி வகையைச் சார்ந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும் சக்தி கொண்டது. உடைந்த எலும்புகளை எளிதில் ஒட்ட வைக்கும் தன்மை இதற்கு உண்டு. மூட்டு வலி உள்ளவர்கள் பிரண்டை மற்றும் முடக்கறுத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர மூட்டுவலி குணமாகும். இவை கிராமங்களில் வேலிகளில் படர்ந்திருக்கும். வீட்டில் எளிதாக பிரண்டையை வளர்க்கலாம். தரையிலோ அல்லது தொட்டியிலோ வளர்க்கலாம். நன்றாக சூரிய ஒளி தேவை இதற்கு. அதனால் சூரிய ஒளி நன்றாக படும் இடத்தில் நட்டு வளர்க்கவேண்டும். ஒரு சிறிய துண்டு பிரண்டையை தொட்டியில் ஊன்றி வைத்தாலே எளிதில் வளர்ந்து விடும். இது கொடி வகை என்பதால் அது படர்வதற்கு ஏற்றவாறு அருகில் ஏதாவது செடி உயரமாக இருந்தால் அதைப் பற்றிக்கொண்டு வளரும். அருகில் மற்ற உயரமான செடி இல்லையென்றால் பிரண்டை படர்வதற்கு ஏற்றவாறு மரக்கம்புகளை ஊன்றிவைக்கலாம். நான் பிரண்டையை என் பால்கனியில் தொட்டியில் நட்டு வைத்திருக்கிறேன். சில மணி நேரமே அதுவும் ஆறு மாதங்களே சூரிய ஒளி என் பால்கனியில் வரும். அடுத்த ஆறு மாதங்களுக்கு சூரிய ஒளி அடுத்த திசையில் வரும். அங்கு தொட்டி வைக்கும் வசதியில்லை. சூரிய ஒளி அதிகம் கிடைக்காததால் நான் வளர்க்கும் பிரண்டையின் அளவு கடைகளில் வாங்கும் பிரண்டையை விட சிறியது. பிரண்டை பார்ப்பதற்கு குச்சி போன்றிருந்தாலும் அதன் நான்கு புறங்களிலும் அரும்புகள் இருக்கும். முற்றல் பிரண்டையை விட பிஞ்சு பிரண்டையே துவையலுக்கு உகந்தது.
தேவையான பொருள்கள்
பிரண்டை - 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
தேங்காய் துருவல்- 1/2 கப்
மிளகாய் வற்றல் - 3 (காரத்திற்கு ஏற்றவாறு)
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
புளி - 1 செ.மீ அளவு உருண்டை
இஞ்சி - சிறிய துண்டு
உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 112 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Veldt Grape is a medicinal vine. It has the ability to heal the broken bones. People who suffer from joint pains should
often include Veldt Grape and balloon vine plant in their diet to heal it. These are spread
over fences in villages. Veldt Grape can be grown in the ground or in a pot at
home. It needs good sunlight. So, the plant should be grown in a sunny place. Since
it is a creeper, it will grow by clinging to any nearby plant that is tall
enough to spread. If there is no other tall plant nearby, wooden poles can be
propped up to support the it. I have Veldt Grape planted in a pot on my
balcony. The size of the Veldt Grape that I grow is smaller than the store-bought
ones because we don't get much sunlight. Young ones are better than the matured
ones for the chutney.
Ingredients
Veldt Grape/Adamant creeper – 1 cup (chopped into
small pieces)
Grated coconut- 1/2 cup
Chillies – 3 (adjust according to spiciness)
Asafoetida powder – a pinch
Tamarind - 1 cm size ball
Ginger - small piece
Urad Dhall - 1 tablespoon
Gingelly oil - 112 tbsp
Salt – as needed
Recipe
Wash the Veldt Grape/Adamant creeper thoroughly and cut on each node. Remove all four edges with the help of a knife. Also remove the fiber. Apply sesame oil on the hands beforehand otherwise, the hand will become unbearably itchy. If your hands get itchy even applying gingelly oil, wash your hands in warm water. Alternatively use gloves while removing fiber and the edges. After removing the fiber and the edges, cut into small pieces.
Heat a pan and add gingelly oil to it. Add Veldt Grape/Adamant creeper to it and saute. Saute patiently till the color of the Veldt Grape/Adamant creeper changes and its size shrinks well from its original size. Transfer the fried Veldt Grape/Adamant creeper pieces to another plate.
In the same pan add urad dhal and saute until golden
brown.
Then add ginger and saute and then add chili powder
and saute. Then add tamarind and Asafoetida powder and fry for few seconds then
add coconut and fry for about 3 minutes then turn off the stove and transfer to
a plate to cool.
Add the cooled Veldt Grape/Adamant creeper, coconut
mixture, required amount of water and salt in a mixie jar. Grind to a fine
paste and delicious Veldt Grape/Adamant creeper chutney is ready.
No need to season mustard as it is already fried in
oil. Those who wish can season with mustard.
சாளை,அயலை,நெத்திலி முதலிய சிறிய வகை மீன்களுக்கு இங்கு பதிவிட்டுள்ள படி குழம்பு செய்தால் ருசியாக இருக்கும். மற்ற பெரிய வகை மீன்களுக்கு ஏற்கெனவே இந்த வலைப்பதிவில் பதிவிட்டுள்ள படி குழம்பு செய்தால் நன்றாக இருக்கும். அந்தப் பதிவைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும். இரண்டு செய்முறைகளும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருந்தாலும் குழம்பு செய்யத் தேவைப்படும் பொருள்கள் சற்று வித்தியாசம். இந்த இரண்டு செய்முறைகளும் என் பாட்டியிடமிருந்து என் அம்மாவும், என் அம்மாவிடமிருந்து நானும் கற்றுக்கொண்டோம். சாளை மீன் இங்கு கிடைப்பது மிகவும் அரிது. அதனால் சாளை மீனை எப்போது ஈரச்சந்தையில் பார்த்தாலும் உடனே வாங்கி வந்து குழம்பும் வறுவலும் செய்துவிடுவேன்.
வறுவல் செய்யத் தேவையானப் பொருள்கள்
சாளை மீன் - 1/2 கிலோ (சுமார் 15 எண்ணம்)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - 2 கொட்டை அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
செய்முறை
சாளை மீனில் இருக்கும் செதில்களை கத்தி அல்லது அரிவாள்மனையின் உதவியுடன் அகற்றவும். பின் அதன் செவிளப்பகுதியோடு குடல்பகுதியையும் அகற்றவும். வால் பகுதியையும் நீக்கவும். தலை வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதையும் அகற்றவும். உடல் பகுதியில் ஒரு கீறல் போடவும். புளியை 1 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் ஊற வைக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,உப்பு மூன்றையும் கலந்து அதனுடன் ஊறவைத்துள்ள புளியை நன்குப் பிசைந்து அந்தத்தண்ணீரைச் சேர்த்து ஒரு பேஸ்ட் செய்யவும். இந்தப் பேஸ்டை சுத்தம் செய்து தயாராக வைத்துள்ள மீன்களின் மீது தடவவும். ஒவ்வொரு மீனையும் தனித்தனியாக எடுத்து அதன் வயிற்றுப்பகுதி மற்றும் உடலில் கீறல் போட்ட பகுதி என்று எல்லா இடங்களிலும் மசாலா பேஸ்டை தடவவும்.மசாலா தடவியபின் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு இரும்புக் கடாயை சூடாக்கி அதில் மீன் பொரிக்கத்தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் மசாலா தடவிய மீன்களைப் பொரித்து எடுக்கவும்.
சாளை மீன் குழம்பு செய்யத் தேவையானப்பொருள்கள்
சாளை மீன் - 1/2 கிலோ (சுமார் 15 எண்ணம்)
தேங்காய் - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
தனியா தூள் - 112 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 114 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீ ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
முருங்கைக்காய் - 1/2
செய்முறை :
புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். தேங்காயுடன் சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் ஊறவைத்துள்ள புளியை நன்குப் பிசைந்து அந்தத்தண்ணீர், மற்றும் குழம்புக்குத்தேவையான தண்ணீர் மற்றும் உப்பைச் சேர்த்து கலக்கி பின் அடுப்பில் வைக்கவும். முருங்கைக்காயைத் தோல் சீவி விரல் அளவு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும். குழம்பு கொதிக்கும் வரை அதிக தீயில் வைத்து கொதித்த பின்பு தீயை மிதமாக வைக்கவும். மீன் நன்றாக வெந்து குழம்பு வற்றி வரும் போது தீயை அணைத்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும். இப்போது சுவையான சாளை மீன் குழம்பு தயார்.
Small types of fish like sardines, anchovy etc. will be delicious if you make the gravy as posted here. For other type of fishes can use the other method that I have already posted on this blog. Click here to view that post. Although both the recipes are almost the same, the ingredients required to make the gravy are slightly different. Both of these recipes were learned from my grandmother by my mother and myself from my mother. Sardines is very rare to find here. So, whenever I see them in the wet market, I immediately buy it and make gravy and fry it.
Ingredients
for Fry
Sardines
– 1/2 kg (about 15 numbers)
Chili
powder - 1 teaspoon
Turmeric
powder – 1/4 teaspoon
Tamarind
– 2 nut size
Salt
– as needed
Coconut
oil – required amount for frying
Recipe
Soak
the tamarind in 1 tablespoon of water. Remove the scales from the fish with the
help of a knife or a sickle. Then remove its intestines. Also remove the tail.
If you don't want the head, remove it too. Make an incision in the body area.
Wash it thoroughly. Mix turmeric powder, chilli powder and salt. Mash the
soaked tamarind well and extract tamarind juice. Add tamarind juice to the chilli,
turmeric mix to make a paste. Apply this paste on the cleaned and prepared
fish. Take each fish separately and apply the masala paste all over its stomach
and body. After 20 minutes heat an iron pan and add enough coconut oil to fry
the fish. When the oil is hot, fry the fish and serve hot.
Ingredients for making Sardines fish curry
Sardines – 1/2 kg (about 15 numbers)
Coconut
- 3/4 cup
Shallots
- 4
Cumin
- 1/2 teaspoon
Pepper
- 1/4 teaspoon
Coriander
powder – 1 & 1/2 teaspoon
Chili
powder – 1 & 1/4 teaspoon
Turmeric
powder – 1/4 teaspoon
Tamarind
- the size of a gooseberry
Salt
- as required
For
Seasoning
Mustard
- 1/2 teaspoon
Curry
leaves – a little
Coconut
oil – 1 tbsp
Drumstick - 1/2
Recipe:
Soak
tamarind in 1/2 cup of water. Grind shallots, cumin, pepper, coriander powder,
chili powder, turmeric powder with coconut. Add the ground mixture to the
cleaned fish. Mash the soaked tamarind well and extract tamarind juice and add it.
Add salt required for the gravy. Add required water for the gravy, mix and put
it on the stove. Cut drumstick into finger size pieces and add it to the gravy. Bring to a boil over high heat until the gravy boils, then
reduce heat to medium. Switch off the flame when the fish is cooked well. Heat
oil in a pan and season with mustard and curry leaves and add to the gravy. Now
the delicious Sardines fish gravy is ready to serve. Serve with hot rice.
பருப்புக்குழம்பு குமரி மாவட்டத்தின் தனித்துவமான குழம்பு. அங்குள்ள மக்கள் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் மீன் குழம்பே சாப்பிடுகிறார்கள். மீன் இல்லாத நாட்களில் பருப்புக்குழம்பு வைத்து சாப்பிடுகிறார்கள். அங்கு நடைபெறும் திருமணங்களில், திருமணவிருந்தின் போது சாதத்திற்கு முதன்முதலில் பரிமாறப்படுவது பருப்புக்குழம்பு. அதன்பிறகு தான் சாம்பார் பரிமாறுவார்கள். இந்த பருப்புக்குழம்புடன் சிறிது நெய் மற்றும் அப்பளம் சேர்த்து சாப்பிட சுவை அபாரமாக இருக்கும். எளிதாக விரைவில் செய்து முடிக்கக்கூடிய குழம்பு இது. சைவ சாப்பாடு சாப்பிடும் நாட்களில் இக்குழம்புடன் அவியல் அல்லது மீல்மேக்கர் உருளைக்கிழங்கு கூட்டுஅல்லது உருளைக்கிழங்கு வறுவல் போன்றவை அருமையாக இருக்கும். அசைவ சாப்பாடு சாப்பிடும் நாட்களில் கோழி மசாலா அல்லது மட்டன் மசாலா போன்றவை மிக அருமையாக இருக்கும்.
தேவையான பொருள்கள்
துவரம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் -2
சின்ன வெங்காயம் - 4
கட்டி பெருங்காயம் - 1/2 செ.மீ துண்டு
தக்காளி சிறியது - 1
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
அரைக்க
தேங்காய் துருவல் - 1/2 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 1&1/2 டீஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
துவரம் பருப்பை 3 முறை கழுவி ஒரு குக்கரில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், பெருங்காயம்,சின்ன வெங்காயம், தக்காளி (4 துண்டுகளாக வெட்டி) சேர்க்கவும்.
பருப்பு வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் அதிக வெப்பத்தில் வைக்கவும். குக்கரில் ஆவி வந்தவுடன் வெயிட்டை போடவும். இப்போது தீயின் அளவை மிதமாக மாற்றவும்.
சுமார் 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து அடுப்பை அணைக்கவும். குக்கரின் பிரஷர் போகும் வரைக் காத்திருக்கவும்.
இந்த நேரத்தில் தேங்காய் துருவல், சீரகம், பூண்டு, மஞ்சள், மிளகாய் வற்றல் பொடி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக (ஒரு சுற்று சுற்றினால் போதும்.) அரைத்துக்கொள்ளவும்.
குக்கரின் பிரஷர் அடங்கியவுடன் அதைத்திறந்து பருப்பைக் கடைந்து கொள்ளவும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காயை அதனுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். (குழம்பு அதிக தண்ணியாகவும் இருக்கக்கூடாது அதேநேரத்தில் அதிகளவு கெட்டியாகவும் இருக்கக்கூடாது)
அத்துடன் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அடுப்பில் அதிகமான தீயில் வைக்கவும். குழம்பு கொதித்து பொங்கி வரும் போது ஒரு கரண்டியை வைத்து கலக்கி விட்டு 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் காய்ந்த மிளகாய் வற்றலை கிள்ளி சேர்க்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். இந்த தாளிப்பை குழம்புடன் சேர்க்கவும். சுவையான பருப்புக் குழம்பு தயார்.
குறிப்பு
இதே முறையில் பாசிப்பருப்பு பயன்படுத்தியும் குழம்பு செய்யலாம்.
Lentil
gravy is the unique curry of Kumari district. People there used to have fish curry
with rice most days of the week. On days when there is no fish available, they have
rice with lentil curry. At weddings there, lentil curry is the first dish
served during the wedding feast. Sambar will be served only after that. Add ghee
and appalam to this gravy and it tastes amazing. This is an easy and quick
gravy to make. Avial or Mealmaker potato curry or potato fry are great with
this gravy on vegetarian days. Chicken masala or mutton masala are great with
this on non-vegetarian days.
Ingredients
Toot
Dal/Pigeon pea - 1 cup
Green
chillies -2
Shallots
- 4
Asafoetida
- 1/2 cm piece
Tomatoes
(small size) - 1
Salt
– as needed
Curry
leaves – a few
To Grind
Grated
coconut - 1/2 cup
Cumin
- 1/2 tsp
Garlic
- 4 cloves
Turmeric
powder – 1/4 tsp
Chilli
powder – 1&1/2 tsp
To
season
Coconut
oil – 1 tablespoon
Mustard
- 1/4 tsp
Dry
Red Chillies – 2
Recipe
Wash
toor dal/pigeon pea 3 times and take it in a pressure cooker. Add green
chillies, asafoetida, shallots, tomatoes (cut into 4 pieces) to it.
Add
enough water to cover the lentils and cover the cooker. Heat it on high heat.
Once the steam comes out add the weight. Now turn the flame to medium.
Simmer
on medium flame for about 15 minutes and switch off the stove. Wait for the
pressure of the cooker to release.
At
this time add grated coconut, cumin, garlic, turmeric and chilli powder in a
mixer jar and grind it coarsely.
Once
the pressure of the cooker is released, open it and mash the dal. Then mix the
ground coconut with it and add required amount of water. (The gravy should not
be too runny and also not too thick)
Also
add salt and curry leaves and mix and keep it on high flame on the stove. When
the gravy boils, mix it with a spoon and let it boil for 2 minutes and switch
off the stove.
Add
oil to a pan and add mustard. When the mustard seeds splutter, add dried
chillies. Then add curry leaves and switch off the stove. Add this seasoning to
the gravy. Delicious lentil gravy is ready.
மீல்மேக்கர் உருளைக்கிழங்கு கூட்டானது குமரி மாவட்டத்தில் கல்யாணவிருந்தில் பரிமாறப்படும் கூட்டுகளில் ஒன்று. இப்பொழுது கல்யாணவிருந்தில் பெரும்பாலும் பிரியாணி தான். ஆனால் 1980-1990 களில் கல்யாணவிருந்தில் சைவ உணவு தான். அதனால் சைவ இறச்சியாக இந்த மீல்மேக்கரை வைத்து கூட்டு செய்வார்கள். பருப்புக்குழம்பு, சாம்பார், ரசம், மோர் இவற்றோடு அவரவர் வசதியைப் பொறுத்து 5 வகை அல்லது 7 வகை அல்லது 9 வகை கூட்டு பரிமாறுவார்கள். அவற்றில் ஒன்று இந்த மீல்மேக்கர் உருளைக்கூட்டு. இதோடு பச்சைப்பட்டாணியை சேர்க்க விரும்புபவர்கள் பச்சைப்பட்டாணியை வேகவைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
மீல்மேக்கர் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1 பெரியது (சிறியதென்றால் 2)
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வறுத்தரைக்க
தேங்காய் துருவல் - 3/4 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 & 1/2 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
நட்சத்திரபூ -1
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2 எண்ணம்
இந்தக்கூட்டை குழம்பாக செய்து சப்பாத்தி,சாதத்திற்கு பரிமாறலாம். அதற்கு, தேங்காய் விழுது சேர்த்த பின், குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குழம்பு தயார் செய்யலாம்.இந்தக்கூட்டுடன் பச்சைப்பட்டாணியும் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு 1/4 கப் பச்சைப்பட்டாணியை 8 மணிநேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவைத்து, உருளைக்கிழங்கு வெந்தபிறகு தேங்காய் விழுது சேர்த்தபின் பச்சைப்பட்டாணியும் சேர்த்து வேகவைக்கவும்.
Meal maker/Soya chunks potato curry is one of the curries served at wedding feasts in Kumari district. Biryani is mostly served at weddings, now a days. But in the 1980s and 1990s, only vegetarian food was served at weddings. So, they considered this meal maker/soya chunks as vegetarian meat. 5 or 7 or 9 types of curries along with dal, sambar, rasam, buttermilk are served at wedding feast. Soya chunks potato curry is one among them.
Ingredients
Meal maker/Soya
chunks - 1/2 cup
Potato – 1
big (2 if small)
Onion - 1
Salt – as
needed
Ginger
garlic paste- 1 tbsp
Curry leaves
– a little
Dry roast
Grated
Coconut - 3/4 cup
Chili powder
- 1 tbsp
Coriander powder–
2 & 1/2 tsp
Turmeric
powder - 1/4 tsp
Fennel seeds
- 1/4 tsp
Star Anise
-1
Cinnamon
stick - 1 small piece
Cloves - 2
To season
Coconut oil
– 1 tablespoon
Star Anise
-1
Cinnamon
stick- 1 small piece
Cloves - 2
Recipe
Heat a pan
on the stove and add grated coconut and fry until golden brown. When it turns
golden brown, add fennel seeds, star anise, cinnamon, cloves and fry for 1
minute, then add coriander and chilli powder and fry for 1 minute, remove from
the stove and transfer to another plate.
Boil 1 1/2
cups of water in a pot. Add soya chunks to the boiling water and bring to a
boil, then turn off the stove and cover the pot for 10 minutes. After 10
minutes drain the water from soya chunks and let it cool a little. After it
cools down take some soya chunks in your hand and squeeze the water out of it.
Similarly squeeze all the water out of the soya chunks.
Chop the
onion finely. Wash the potatoes well, remove the skin and cut into 2 cm cubes.
Now place a
pan in the stove, add oil to it and add cinnamon, cloves and star anise.
Then add
finely chopped onions and saute. Then add ginger and garlic paste and saute.
Then add chopped potatoes, salt and stir. Saute for 1 minute and then add water
as required for potatoes and cover and cook on low flame.
Meanwhile
add the roasted coconut and other ingredients to the mixer and grind it along
with turmeric powder and water.
Once the
potatoes are cooked, add ground coconut paste, little water and mix. Then add
the prepared soya chunks to it. Add salt to suit the soya chunks and coconut
paste. Since the potatoes are already salted, adding a small amount of salt is
enough now. Stir in the curry leaves and keep it until it is done and then
remove from the stove.
Note
This curry can be made into gravy and served with chapati and rice. For that, after adding the coconut paste, add required amount of water to the gravy and boil it to prepare the gravy.
Green peas can also be added to this curry. For that, soak 1/4 cup of green peas for 8 hours, add salt and boil. Once potatoes are cooked, add coconut paste and boiled green peas too.