Tuesday, February 6, 2024

உடைத்துவிட்ட முட்டைக் குழம்பு/Poached Egg Curry/Muttai Kulambu

இந்த முட்டைக் குழம்பு சாதத்துடன் அல்லது சிற்றுண்டி வகைகளுக்குத் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். இதே செய்முறையை பயன்படுத்தி, முட்டையைத் தனியாக வேகவைத்து குழம்பில் சேர்த்தும் பயன்படுத்தலாம்.


தேவையான பொருட்கள்

முட்டை - 2

சின்ன வெங்காயம் - 7 எண்ணம்

தக்காளி - 1

பச்சைமிளகாய் - 2

இஞ்சி - அரை இஞ்ச் துண்டு

பூண்டு - 4 பல் 

தேங்காய் துருவல் - 3/4 கப்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

நட்சத்திரபூ -1

கிராம்பு - 2 எண்ணம்

உப்பு - தே.அளவு

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மல்லி தழை - சிறிது

செய்முறை

சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக வெட்டிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு சிறிது சோம்பு சேர்க்கவும். பின்பு  சிறிதாக வெட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் நன்கு வதங்கிய பின்பு காம்பு நீக்கிய பச்சைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.  தக்காளி வதங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், தேங்காய்,கிராம்பு,நட்சத்திரப்பூ,பட்டைப்பொடி,இஞ்சி,பூண்டு,மஞ்சள் பொடி,மிளகாய்ப்பொடி,மல்லிப்பொடி ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். தக்காளி நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்க்கவும். குழம்புக்குத் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து  5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். 5 நிமிடங்களுக்குப்பின் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து குழம்பில் ஊற்றவும். பின் மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவைக்கவும். இப்போது முட்டை நன்றாக வெந்திருக்கும். கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து இறக்கவும். 
குறிப்பு
சாதத்திற்கு சேர்த்துக்கொள்வதாக இருந்தால் உப்பு சிறிது தூக்கலாகவும், டிபன் வகைகளுக்கு சேர்த்துக்கொள்வதாக இருந்தால் உப்பு சிறிது குறைவாக சேர்த்துக்கொள்ளவும்.

Ingredients

Eggs - 2

Shallots - 7 no.s

Tomato - 1

Green Chillies – 2

Ginger – half inch piece

Garlic - 4 cloves

Grated Coconut - 3/4 cup

Turmeric powder - 1/4 tsp

Chili powder - 1 tbsp

Coriander powder - 2 tbsp

Cinnamon powder – 1/8 tsp

Fennal seeds - 1/4 tsp

Star flower -1

Cloves - 2 no.s

Salt - as required

Coconut oil – 1 tablespoon

Curry leaves – a few

Coriander leaves - a few

Recipe

Finely chop the onion and tomato. Place the pan on the stove, add oil and some fennel seed. Then add finely chopped onions and saute. After the onions are fried well, add the de-stemmed green chillies and tomatoes and saute. Meanwhile add coconut, cloves, star anise, cinnamon powder, ginger, garlic, turmeric powder, chilli powder and coriander powder in a mixer jar and grind them into a fine paste. After the tomatoes are sautéed well, add the grated coconut. Add required amount of water and salt to the gravy, cover and boil for 5 minutes. After 5 minutes break the eggs one by one and pour into the gravy. Then cover and cook for 2 minutes. By now the eggs will be well cooked. Add curry leaves and coriander leaves and remove from fire.

Note
If serving with rice, add more salt, and if serving with tiffin varieties add less salt.
 

No comments: