Friday, March 15, 2024

எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls

கால்சியம் சத்து நிறைந்த உணவுகளில் ஒன்று கறுப்பு எள். கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் பால், முட்டை,கறுப்பு எள்,கேழ்வரகு,பாதாம் போன்றவற்றை தங்கள் உணவில் அடிக்கடி  சேர்த்துக் கொள்ளவேண்டும். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு இந்த எள்ளுருண்டை அடிக்கடி செய்து தர வேண்டும். மாதவிடாயானது சீரான இடைவெளியில் வருவதற்கு இது உதவும்.




தேவையான பொருள்கள்

கறுப்பு எள் - 1 & 1/2 கப்
பொடித்த கருப்புக்கட்டி(கருப்பட்டி) - 3/4 கப்

செய்முறை

கறுப்பு எள்ளை ஒரு இரும்புக்கடாயில் சேர்த்து வறுக்கவும். எள் நன்றாக வறுபட்டு வெடிக்கும் போது அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆறவிடவும். ஆறிய பின் மிக்ஸி ஜாரில் வறுத்த எள்ளையும் பொடித்த கருப்புக்கட்டியையும் சேர்த்து பொடிக்கவும். பொடித்த எள்ளை உருண்டைகளாக உருட்டி காற்றுப்புகாத கண்ணாடி போத்தல்களில் அடைத்து வைக்கவும்.

Black sesame is one of the calcium rich foods. People with calcium deficiency should include milk, eggs, black sesame seeds, ragi, almonds etc. in their diet frequently. 

Ingredients

Black sesame seeds – 1 & 1/2 cup
Powdered Palm sugar - 3/4 cup

Recipe

Roast black sesame seeds in an iron pan. When the sesame seeds crackle, remove from the stove and let cool. After it cools down, add roasted sesame seeds and powdered palm sugar in a mixer jar and grind.  Transfer the ground sesame powder into a bowl, roll into balls and serve. Store the left-over balls in airtight glass bottles.

Tuesday, March 12, 2024

பச்சைப்பயறு கஞ்சி/Green bean Porridge

பச்சைப்பயறு கஞ்சி சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. எல்லா வகையான துவையலும் இந்த கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள ஏதுவாகும். துவையல் இல்லையென்றாலும் வறுத்த நிலக்கடலை,ஊறுகாய் அல்லது ஏதாவது அப்பளம் இருந்தாலும் இந்தக் கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள ஏதுவாகும். சோறு வடிக்கும் நேரத்தில் இதை செய்து முடித்துவிடலாம். காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் சாப்பிடலாம். பெண்களுக்கு உடல் நலமில்லாத நேரத்தில் சட்டென ஒரு சமையல் செய்து முடிக்க வேண்டுமென்றால் இந்தக் கஞ்சி கை கொடுக்கும். அவரவர் சுவைக்கேற்றவாறு கஞ்சியின் தண்ணீர் அளவை மாற்றிக்கொள்ளலாம். சற்று கெட்டியாக விரும்புபவர்கள் தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். 


தேவையான பொருள்கள்

பச்சைப்பயறு - 1/2 கப்

பொன்னி புழுங்கல் அரிசி - 1/2 கப்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

பூண்டு - 15 பல்(சிறியது)

தேங்காய்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சோறு வடிக்கும் அளவு தண்ணீர் (சுமார் 8 கப்) எடுத்துக் கொதிக்க வைக்கவும். பச்சைப்பயறை 3 முறை கழுவி, கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும். பச்சைப்பயறு சேர்த்து கொதித்த பின், 5 நிமிடங்கள் கழித்து, அரிசியை 3 முறை கழுவி சேர்க்கவும். அதனுடன் வெந்தயம் மற்றும் பூண்டு சேர்த்து வேக வைக்கவும். அரிசியும் பச்சைப் பயறும் நன்றாக வெந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பரிமாறுவதற்கு முன் தேங்காய் சேர்த்து பரிமாறவும்.

Green bean porridge is not only tasty but also healthy. This porridge can be consumed anytime in a day. If one wants to cook a quick meal, this porridge will come in handy. You can change the amount of water in the porridge according to your taste. Those who prefer it slightly thicker should reduce the amount of water.

Ingredients

Green Bean - 1/2 cup

Parboiled rice - 1/2 cup

Fenugreek - 1 tsp

Garlic - 15 cloves (small size)

Grated coconut – 4 tbsp

Salt – as needed

Recipe

Boil water (about 8 cups) in a pot. Wash green beans 3 times and add to boiling water. After 5 minutes, wash the rice 3 times and add it to the boiling green bean. Add fenugreek and garlic to it and cook. When the rice and green bean are cooked well, remove from the stove and mix with required amount of salt. Garnish with coconut before serving.

Tuesday, February 27, 2024

தக்காளி ரசம் /புளியில்லா ரசம்/ Tomato Rasam/Rasam without tamarind

தேவையான பொருள்கள்

தக்காளி  - 3

பூண்டு - 8 பல்(சிறியது)

மிளகு - 1 & 1/2 டீ ஸ்பூன் 

சீரகம் -1 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு -தேவைக்கு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு- 1/4 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி இலை - சிறிது



செய்முறை

மிளகு, சீரகம் இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

பின்னர் அவற்றுடன் பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் 2 தக்காளி(தக்காளியை 4 துண்டுகளாக வெட்டிச் சேர்க்கவும்) சேர்த்து ஒரு சுற்று மட்டும் மிக்ஸியில் ஓட விடவும்.

இறுதியாக மீதி இருக்கும் ஒரு தக்காளியை 4 துண்டுகளாக வெட்டி அரைத்து வைத்துள்ள கலவையுடன் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இவ்வாறு செய்வதால் பாதி தக்காளி நன்றாக அரைந்தும் மீதி தக்காளி ஒன்றும் பாதியாக அரைந்தும். கிடைக்கும். 

வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து உடனே அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். 

பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி இலையை சிறிதாக நறுக்கி சேர்க்கவும். ரசம் கொதி வந்த பிறகு ஓரிரு நொடிகள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு

இந்த ரசத்தில் புளி சேர்க்காததால் சமைத்த அன்றே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அடுத்த நாள் வைத்திருந்தால் கெட்டுப்போக  வாய்ப்பு அதிகம்.

Ingredients

Tomatoes - 3

Garlic - 8 cloves (small size)

Pepper - 1 & 1/2 tsp

Cumin - 1 tea spoon

Turmeric powder – 1/4 teaspoon

Asafoetida powder - a pinch

Salt - as required

Oil - 1 tablespoon

Mustard- 1/4 tea spoon

Curry leaves – a little

Coriander leaves - a little

Method

Add pepper and cumin seeds in a mixing jar and grind them coarsely.

Then add garlic, turmeric powder, asafoetida powder and 2 tomatoes (cut the tomatoes into 4 pieces and add them) and let it run in the mixer for one round.

Finally, cut the remaining tomato into 4 pieces and add it to the ground mixture and take it again in the mixer. By doing this, half of the tomatoes will be finely ground, and the rest of the tomatoes will be half ground. 

Heat a pan and add oil, and mustard once the oil is hot. Once the mustard seeds splutter, add the curry leaves and immediately add the ground mixture and saute for two minutes.

Then add required amount of water and salt. Add finely chopped coriander leaves. Once the rasam boils, take it off the stove after a couple of seconds. Serve with hot rice.

Note

Since no tamarind is added to this rasam, it should be consumed on the same day it is cooked. There is a high chance of spoilage if kept the next day.

Monday, February 19, 2024

பீட்ரூட் பொரியல்/பீட்ரூட் தோரன்/Stir fried Beetroot

தேவையான பொருள்கள்

பீட்ரூட் - 1

சாம்பார் வெங்காயம் - 5

தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

சீரகம் -1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/4 டீ ஸ்பூன்

உப்பு -தேவைக்கு

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு- 1/4 டீ ஸ்பூன்

உளுத்தம்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது



செய்முறை

பீட்ரூட்டைக் கழுவி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தின் தோலை அகற்றி சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். 

வாணலியைச் சூடாக்கி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பெருங்காயப்பொடி சேர்த்துக் கிளறி பின் வெட்டி வைத்துள்ள சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

சாம்பார் வெங்காயம் வதங்கிய பின் அரிந்து வைத்தள்ள பீட்ரூட் சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். பீட்ரூட் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். இடையிடையே பீட்ரூட்டைக் கிளறி விட்டு வேகவைக்கவும். 

பீட்ரூட் வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் தூள் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 

பீட்ரூட் வெந்து தண்ணீர் வற்றியவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். 

தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Ingredients

Beetroot – 1

Shallots – 5

Coconut(grated) - 3 tablespoon

Cumin - 1/2 tea spoon

Turmeric powder – 1/4 teaspoon

Chilli powder - 1/4 teaspoon

Salt - as required

Coconut oil – 1 tablespoon

Mustard- 1/4 tea spoon

Black gram - 1 tablespoon

Asafoetida powder – a pinch

Curry leaves – a little

Recipe

Wash, peel the beetroot skin and cut into small pieces. Remove the skin of the shallots and finely chop it. 

Heat a pan and add coconut oil. Once oil is hot add mustard. Once the mustard seeds splutter, add the urad dal and fry until golden brown. 

Stir in the asafoetida powder and then add the chopped shallots and saute. After sauteing the shallots, add chopped beetroot and saute. 

Add turmeric powder and salt to it and stir. Add required amount of water to cook beetroot and cover . Stir the beetroot occasionally. 

While the beetroot is cooking, add grated coconut, cumin and chili powder and grind it coarsely in a mixer. 

Once the beetroot is cooked and the water is drained, add the grated coconut mixture and curry leaves and stir. 

Cook for 2 minutes and remove from oven. Serve with hot rice.


Tuesday, February 13, 2024

முடக்கத்தான் கீரை சூப்/முடக்கறுத்தான் கீரை சூப்/Balloon vine Soup

முடக்கத்தான் கீரை / முடக்கறுத்தான் கீரை பெயருக்கு ஏற்றவாறே முடக்கை அறுக்கக்கூடியது. அதாவது முடக்குவாதத்தைப் போக்கக்கூடியது. கிராமங்களில் புற்களோடு வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். வாரத்தில் 3 நாட்கள் முடக்கத்தான் கீரை சூப்/முடக்கறுத்தான் கீரை மற்றும் பிரண்டை சாப்பிட்டு வர கைகால் மூட்டு வலிகள் குணமாகும். பிரண்டை சட்னி ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன். அதைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.



தேவையான பொருள்கள்

முடக்கத்தான் கீரை - 1 கைப்பிடி

சின்ன வெங்காயம் - 3

பூண்டு பல் -3

இஞ்சி  - 1 சிறிய துண்டு

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 5 

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

தக்காளி - 1

செய்முறை

சுத்தம் செய்து கழுவிய முடக்கத்தான் கீரை, சின்ன வெங்காயம்,பூண்டு,இஞ்சி,சீரகம்,மிளகு,மஞ்சள் தூள்,தக்காளி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் 1&1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும். சூடு சிறிது ஆறியபின் ஒரு கரண்டியை வைத்து மசித்துக்கொள்ளவும். பரிமாறும் போது உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும். வடிகட்டி குடிக்கவிரும்புபவர்கள் வடிகட்டி குடிக்கவும்.

Ingredients

Balloon Vine Leaves - 1 handful

Shallots - 3

Garlic clove -3

Ginger - 1 small piece

Cumin - 1 tsp

Pepper corns- 5

Turmeric powder – a pinch

Tomato - 1

Recipe

Take the cleaned and washed balloon vine leaves, shallots, garlic, ginger, cumin, pepper corns, turmeric powder and tomato in a vessel and add 1&1/2 cup of water to it and boil it. Simmer on medium flame for about 15 to 20 minutes. After the heat cools down a bit, mash it with a spoon. Season with salt and pepper when serving. 

Tuesday, February 6, 2024

உடைத்துவிட்ட முட்டைக் குழம்பு/Poached Egg Curry/Muttai Kulambu

இந்த முட்டைக் குழம்பு சாதத்துடன் அல்லது சிற்றுண்டி வகைகளுக்குத் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். இதே செய்முறையை பயன்படுத்தி, முட்டையைத் தனியாக வேகவைத்து குழம்பில் சேர்த்தும் பயன்படுத்தலாம்.


தேவையான பொருட்கள்

முட்டை - 2

சின்ன வெங்காயம் - 7 எண்ணம்

தக்காளி - 1

பச்சைமிளகாய் - 2

இஞ்சி - அரை இஞ்ச் துண்டு

பூண்டு - 4 பல் 

தேங்காய் துருவல் - 3/4 கப்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

நட்சத்திரபூ -1

கிராம்பு - 2 எண்ணம்

உப்பு - தே.அளவு

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மல்லி தழை - சிறிது

செய்முறை

சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக வெட்டிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு சிறிது சோம்பு சேர்க்கவும். பின்பு  சிறிதாக வெட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் நன்கு வதங்கிய பின்பு காம்பு நீக்கிய பச்சைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.  தக்காளி வதங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், தேங்காய்,கிராம்பு,நட்சத்திரப்பூ,பட்டைப்பொடி,இஞ்சி,பூண்டு,மஞ்சள் பொடி,மிளகாய்ப்பொடி,மல்லிப்பொடி ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். தக்காளி நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்க்கவும். குழம்புக்குத் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து  5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். 5 நிமிடங்களுக்குப்பின் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து குழம்பில் ஊற்றவும். பின் மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவைக்கவும். இப்போது முட்டை நன்றாக வெந்திருக்கும். கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து இறக்கவும். 
குறிப்பு
சாதத்திற்கு சேர்த்துக்கொள்வதாக இருந்தால் உப்பு சிறிது தூக்கலாகவும், டிபன் வகைகளுக்கு சேர்த்துக்கொள்வதாக இருந்தால் உப்பு சிறிது குறைவாக சேர்த்துக்கொள்ளவும்.

Ingredients

Eggs - 2

Shallots - 7 no.s

Tomato - 1

Green Chillies – 2

Ginger – half inch piece

Garlic - 4 cloves

Grated Coconut - 3/4 cup

Turmeric powder - 1/4 tsp

Chili powder - 1 tbsp

Coriander powder - 2 tbsp

Cinnamon powder – 1/8 tsp

Fennal seeds - 1/4 tsp

Star flower -1

Cloves - 2 no.s

Salt - as required

Coconut oil – 1 tablespoon

Curry leaves – a few

Coriander leaves - a few

Recipe

Finely chop the onion and tomato. Place the pan on the stove, add oil and some fennel seed. Then add finely chopped onions and saute. After the onions are fried well, add the de-stemmed green chillies and tomatoes and saute. Meanwhile add coconut, cloves, star anise, cinnamon powder, ginger, garlic, turmeric powder, chilli powder and coriander powder in a mixer jar and grind them into a fine paste. After the tomatoes are sautéed well, add the grated coconut. Add required amount of water and salt to the gravy, cover and boil for 5 minutes. After 5 minutes break the eggs one by one and pour into the gravy. Then cover and cook for 2 minutes. By now the eggs will be well cooked. Add curry leaves and coriander leaves and remove from fire.

Note
If serving with rice, add more salt, and if serving with tiffin varieties add less salt.
 

Sunday, February 4, 2024

செம்பருத்திப்பூ டீ/தேநீர்/தீநீர்/Hibiscus tea

செம்பருத்திப்பூ தேநீர் அடிக்கடி உட்கொண்டுவந்தால், இதயம் பலப்படும். பலவகை, பலநிற செம்பருத்தி பூக்கள் இன்று கிடைக்கிறது. ஆனால் ஒற்றை அடுக்கு சிகப்பு நிற பூக்கள் மட்டுமே இந்தத் தேநீர்/தீநீர் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். செம்பருத்தி பூச்செடி அநேக வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு அழகு பூச்செடி. இச்செடி அழகு மட்டும் அல்ல ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. 



தேவையான பொருள்கள்

செம்பருத்திப் பூ - 4 

பனங்கற்கண்டு - இனிப்புக்கேற்றவாறு

தண்ணீர் - 1 கப்

செய்முறை

செம்பருத்திப் பூக்களை கழுவிக்கொள்ளவும். கழுவிய பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து அதனுடைய இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் செம்பருத்திப்பூ இதழ்களைச் சேர்த்து சூடாக்கவும். தண்ணீர் கொதித்த பின் பனங்கற்கண்டு சேர்த்து கிளறவும். செம்பருத்திப்பூ இதழ்களின் நிறம் மாறும் வரை அடுப்பில் வைத்திருந்து பின் இறக்கி வடிகட்டவும். செம்பருத்திப்பூ டீ தயார்.

Consuming Hibiscus tea regularly can strengthen the heart. Many varieties and colors of hibiscus flowers are available today. But only single layer red flowers should be used to make this tea/tea. 

Ingredients

Hibiscus Flower - 4

Palm candy - as per taste

Water - 1 cup

Recipe

Wash the hibiscus flowers. Take the washed flowers one by one and separate only the petals. Pour water in a pan and add hibiscus petals and heat it. After the water boils, stir in the palm candy. Keep it in the stove until the hibiscus petals change color and then remove and strain. Hibiscus tea is ready to serve.