புதினா சட்னி, இட்லி, தோசைக்கு ஏற்ற ஒரு சட்னி. சுடு சாதத்துடன் புதினா துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிடும் போது அதன் ருசி அபாரமாக இருக்கும்.
புதினா இலைகள் - 1 கப்
தேங்காய் - 1/2 கப்
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
புளி - ஒரு கொட்டை
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
புதினா இலைகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். அதில் உளுந்து சேர்த்து வதக்கவும். உளுந்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் அதனுடன் புதினா இலைகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். புதினா இலைகள் வதங்கியபின் அதில் இஞ்சி, புளி சேர்த்து வதக்கவும்.
பின்பு மிளகாய்த்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கிய பின் பெருங்காயத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.பின் தேங்காய் சேர்த்து சுமார் 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
பின்பு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.
ஆறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான புதினா சட்னி தயார். தேவைப்பட்டால் கடுகு தாளித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment